Thursday, July 3, 2008

யார் பெரியவர்?

இன்றைய உலகில் உடனே பதில் சொல்ல முடியாத கேள்விகளில் இதுவும் ஓன்று என்று சொல்லலாம்.
  • வீட்டில் யார் பெரியவர் தாயா? தகப்பனா? அல்லது அவர்களை பெற்ற தாத்தா பாட்டியா?
  • நாட்டில் யார் பெரியவர் பிரதமரா? அல்லது குடியரசு தலைவரா? அல்லது எல்லோரையும் தத்தளிக்க வைத்துகொண்டிருக்கும் நிதி அமைச்சரா?
  • குருவில யார் பெரியவர் லக் டீச்சரா அல்லது காலேஜ் புரபெசரா? அல்லது டியுசன் வாத்தியாரா?
  • சாமிகளில் யார் பெரியவர் சிவனா விஷ்ணுவா அல்லது எலோரையும் ஆட்டி படிக்கும் சாத்தானா?
  • கட்சி தலைவர்களில் பெரியவர் ஆயார் கலைஞரா? அம்மாவா? அல்லது சரியான நேரத்தில் சரியான இடத்தில் கூட்டு சேரும் மருத்துவர் அய்யாவா?
  • உலகத்தில் பெரியவர் யார் ஜார்ஜ் புஷ்ஷா, புதினா அல்லது எல்லோரும் பயமுறுத்திக்கொண்டு இருக்கும் பின்லேடனா?
இப்படி யார் பெரியவர் என்று சொல்லமுடியாத கேள்விகள் இந்த உலகில் அநேகம்.

போட்டியும் பொறாமையும் நிறைந்த இந்த உலகில் ஒவ்வொருவரும் பிறரை பிட எவ்விதத்திலாவது பெரியவராக வர பாடுபடுகின்றனர், அல்லது பெரியவராக தன்னை காட்டிக்கொள்கின்றனர்.

மனிதர்கள் என்ன சாமிகளுக்கு இடையே கூட யார் பெரியவர் என்ற சண்டை வந்தது என்று புராணங்கள் சொல்கின்றன.


நாம் சாதரணமாக வயது முதிர்ந்தவர்களை பெரியவர்கள் என்று சொன்னாலும் அதற்குரிய மதிப்பு அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை பணம் உள்ளவனைத்தான் மனிதர்கள் பெரியவராக கருதும் குண நிலையில் மனிதர்கள் உள்ளனர். ஆனால் பலம் உள்ளவனை கண்டால் அவனுக்கு பயந்து மதிப்பு கொடுக்கின்றனர்

இயேசு பெருமானின் 12 சீஷர்களிடையே ஒருமுறை யார் பெரியவர் என்ற போட்டி வந்துவிட்டது. இதை அறிந்த இயேசு அவர்களை அழைத்து "உங்களில் யார் பெரியவராக இருக்க விரும்புகிறீர்களோ அவர்கள் பிறருக்கு பணிவிடைக்கரனாக இருக்க கடவன்" என்று அருமையான ஒரு வார்த்தையை சொன்னார்.

அதாவது நீங்கள் பிறரைவிட பெரியவராக வேண்டுமா?

யாரைவிட பெரியவராக நினைக்கிறீர்களோ அவர்கள் சொல்லுக்கு முழுமையாக கீழ்படிந்து அவர்கள் சொல்லும் வேலைகளை எல்லாம் தட்டாமல் செய்யவேண்டும் என்றும் சொன்னதோடு. அதை தன் வாழ்நாளில் செய்தும் காடினார். அதாவது ஒரு துணியை எடுத்து சீஷர்கள் எல்லோருடைய கால்களை கழுவி துடைத்ததொடு மட்டுமல்லாமல், என்னை நீங்கள் ஆண்டவர் என்று சொல்கிறீர்கள் நானே இப்படி செய்தது உண்டானால் நீங்களும் ஒருவர் கால்களை ஒருவர் கழுவி பணிவிடை செய்யுங்கள் என்று செய்து காட்டினார்.


அவர் வழியில் நடந்தால் இந்த உலக வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சற்று கற்பனை பண்ணி பார்த்தால்

நான் என் முதலாளியை விட பெரியாளாக வேண்டும் என்று அவருக்கு ஓடி ஓடி பணிவிடை செய்வேன் அவர் என்னைவிட பெரியாளாக வேண்டும் என்று எனக்காக ஓடி ஓடி பணிவிடை செய்வார்

அஹா எவ்வளவு அருமையாக வாழ்க்கை இருக்கும்!

வெறும் கற்பனை தான்.