Friday, March 28, 2008

தீமையை நண்மை சமன் செய்யுமா?

தீமையை நண்மை சமன் செய்யுமா?

தீமை, தவறு, பாவம், கெடுதல் போன்றவற்றை செய்தவர்கள் அதற்கு சமமாக நல்ல காரியங்கள் அதாவது பிறருக்கு உதவி, தான தர்மங்கள், நேர்மையாக நடத்தல் போன்ற நல்ல காரியங்களை செய்வதன் மூலம் சமன் செய்து விடலாம் என்றும், தீமைக்கு சரியான நன்மை செய்துவிட்டால் இறைவனின் தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம் என்பதும் இன்று உலகில் பரவலாக எல்லோரும் சொல்லும் கருத்தாக உள்ளது. அது சரியா தவறா என்பதை சற்று ஆராய்வோம்

1. கூவம் தியரி

A. நிலை ஒன்று: -

ஒரு குவளையில் பாதி அளவு கூவம் தண்ணீரை (சாக்கடை நீர்) தண்ணீரை எடுத்துக்கொள்ளவும் இன்னொரு குவளையில் 100% சுத்தம் பண்ணப்பட்ட சுத்தமான மினரல் வாட்டரை எடுத்துக்கொள்ளவும். சுத்தமான தண்ணீரை கூவம் தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக உற்றி நன்றாக கலக்கவும்.

இரண்டும் நன்றாக கலந்த பிறகு அந்த தண்ணீரை குடிக்க முடியும் என்றால் கெட்ட செயல்களை நல்ல செயல்கள் சரிசெய்ய முடியும்.

ஆனால் யாரும் மனதார குடிக்க முடியாது.

B. நிலை இரண்டு:

இப்பொழுது குவளையில் இருக்கும் எல்லா தண்ணீரையும் கீழே கொட்டி விடவும். அப்படியே அதே குவளையில் சுத்தமான மினரல் வாட்டரை ஊற்றவும்.

இப்பொழுது கூட பழைய துர்நாற்றம் அதில் கொஞ்சம் இருப்பதால் இந்த நீரை நம்மால் குடிக்க முடியாது.

அதுபோல்தான் தீமையை (பாவத்தை) நண்மை (புண்ணியம்) ஒரு நாளும் சரி செய்ய முடியாது. பாவம் தண்டனையினால் (பலி) மட்டுமே சரி செய்யப்படும்

நிலை மூன்று:

இப்பொழுது குவளையில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக கீழே கொட்டி விட்டு நன்றாக டெட்டால் போட்டு கழுவவும். பிறகு அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றினால் ஒருவேளை குடிக்க முடியும்.

அது போலத்தான் மனித இருதயமும் :-

மனித இருதயம் மகா திருகுள்ளதகவும், கேடுள்ளதகவும், வஞ்சம், பொறாமை, இச்சை, பண ஆசை போன்ற தீமையால் நிறைந்துள்ளது. இதை ஒருவர் எப்படி நன்மை செய்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னை சுத்திகரித்தாலும் அதை சுத்தமாக்க முடியாது. இறைவனால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஏனென்றால் இறைவன் மகா பரிசுத்தர்.

பாவம் அறியாத பரிசுத்தர் இயேசு கிறிஸ்த்துவின் இரத்தம் என்னும் டெட்டால் மட்டுமே நமது பாவத்தை கழுவி சுத்திகரித்து இறைவனுக்கு ஏற்றவனாக மாற்ற முடியும். அவராலே அன்றி வேறு எதனாலும் இறைவனிடம் ஒப்புரவாக முடியாது.



Wednesday, March 12, 2008

தீய சக்தி (சாத்தான்) எப்படி உருவானது?

அன்பு வாசகர்களே தீய சக்தி எப்படி உருவானது என ஆராய முற்பட்டபோது கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன

எது உண்மை?

தெரிந்தவர் சற்று விளக்குங்களேன்!

கிறிஸ்த்தவம்:

அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி என்பவன் இறைவனின் வலது கை போன்ற வல்லமைமிக்க தேவதூதன் ஆவான் . இவன் உலக மக்களை இறைவனை ஆராதிக்க வழி நடத்துவதர்க்காக இறைவனால் படைக்கப்பட்டவன்.

ஒருமுறை அவன் தன் மனதில் இறைவனை போல் தான் ஆகவேண்டும் என்றும், மக்கள் எல்லோரும் தனக்கே ஆராதனை செய்ய வேண்டும் என்றும், தேவனுடைய சிங்காசனத்துக்கு மேல் தனது சிங்காசனத்தை உயர்த்த வேண்டும் என்று நினைத்ததால் இறைவனால் ஆகாதவன் என்று அதல பாதாளத்தில் தள்ளப்பட்டான். அவனே சாத்தான் என்றும் லூசிபர் என்றும் சொல்லப்படும் தீய சக்தி.

இறைவன் மேல் உள்ள கோபத்தால் அவரால் படைக்கப்பட்ட மனிதர்களை கெடுத்து துன்புறுத்தி இறுதியில் தனது இடமாகிய நரக பாதாளத்துக்கு கொண்டு செல்கிறான்.

இவன் தேவனுடன் அனேக நாட்கள் இருந்ததால் தேவனை போல அனேக காரியங்களையும் செய்ய வல்லவன்

ஆதாரம் - பைபிள் - ஏசாயா தீர்க்கதரிசி புத்தகம்

இஸ்லாம்:

இப்லிஸ் என்னும் அக்கினியால் படைக்கப்பட்ட தேவ தூதனிடம் இறைவன் மண்ணால் படைக்கப்பட்ட மனிதனை சிரம் பணிய சொன்னபோது தான் மனிதனைவிட பெரியவன் என்ற பெருமையின் காரணமாக சிரம்பணிய மறுத்துவிடான், அகவே அவன் சைத்தானாக மாறிவிட்டான். பின்பு இறைவனிடம் தனக்கு தவணை தரவேண்டும் என்றும் அப்பொழுது மனிதர்கள் எல்லோரையும் என்னை போலவே வழி கெட்டவர்கள்தான் என்பதை நிரூபிப்பேன் என்று அவகாசம் கேட்டு மனிதர்களை கெடுத்து வருவதாகவும் வசனங்கள் கூறுகின்றன.

ஆதாரம்:

திருக்குர்ரான் 15ம் அதிகாரம் 31லிருந்து 39முடிய

இந்து:

இந்து வேதத்தில் தீய சக்தி எப்படி உருவானது என்பது அந்தணர்களால் மறைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது:

ஆனாலும் முத்துக்குட்டி என்ற கன்னியாகுமரி மாவட்ட சாமி தோப்பை சேர்ந்த இந்து தீர்க்கதரிசியால் அது வெளிப்படுத்தப்பட்டது.

ஆதியில் நாராயணர் வானம், பூமி, அண்டம், பிண்டம் எல்லாவற்றையும் செவ்வையாக படைத்து, தீமை என்றும் மரணம் என்றும் எதுவுமே இல்லாமல் அரசாட்சி செய்து வரும் போது. தானே முதலும் முடிவுமானவன் என்பதையும் தனது உயிரை கொடுக்கவும் எடுக்கவும் தனக்கு அதிகாரம் உண்டு என்பதை விளங்கப்பண்ணவும் தன் பலியின் மூலம் தேவர்களுக்கு நித்ய வாழ்க்கையை கொடுக்கவும் ஒரு பெரிய வேள்வி ஒன்றை நடத்தி அதில் தன்னை தானே பலியாக்கினார் அதற்கு ஆதிபலி என்று பெயர்.

தான் மீண்டும் வருவேன் என்றும் அதுவரை தனது சிங்காசனத்தை பாதுகாக்க பொறுப்புள்ள தனது தூதர் மூவருக்கு கட்டளையிட்டார். அவர் திரும்பி வர சிறிது தாமதம் அகவே, மூவரில் ஒரு தூதன் அவர் திரும்பி வரமாட்டார் இனி எல்லோருக்கும் நானே ராஜா என்றானாம். ஆனால் நாராயணர் திரும்ப வந்து அவனை பாதாளத்துக்கு தள்ளி சிறை வைத்தாரம். அவன் மானம்திரும்பி மன்னிப்பு கேட்க 7 யுகங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது ஒவொரு யுகத்திலும் ஒரு அரக்கனாக அதாவது சூரனாக, ராவணனாக, துரியோதனனாக பிறந்து அகங்காரத்தால் நாராயனரின் அவதாரங்களால் மரித்தான்.

கடைசியில் கலியாக அவதாரம் எடுத்து எல்லா தீமையும் செய்து வருகிறான் என்றும் இறைவனின் கடைசி அவதாரமாகிய கல்கி அவதாரத்தால் அவன் அழிக்கப்பட்டு பாதாளத்தில் நித்யமாக அடைக்கப்படுவான் என்றும் கூறுகிறார்.

ஆதாரம்: யுகங்கள் 7 ஏன்

இதில் எனக்குள்ள கேள்விகள்:


1. தீமை என்பதே இல்லாத அந்த நேரத்தில் இறைவனின் தூதனுக்கு அந்த பெருமை, கீழ்படியாமை மற்றும் தீமையான எண்ணம் எப்படி மனதில் வந்தது?

2.இறைவன் சர்வ வல்லவராக இருக்கும் போது தான் படைத்த தூதனை தன் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவனாக அதற்கு மிஞ்சி ஒன்றும் எண்ணாதவனாக படைத்திருக்கலாமே என் செய்யவில்லை?
3. பைபிள் முறைப்படி இறைவனை போல ஆகவேண்டும் என்ற தீய எண்ணம் ஏற்பட்டு இறைவனால் ஆகாதவன் என்று தள்ளப்பட்டவன் இருக்கும் இடத்தில் ஆதமும் ஏவாளும் ஏன் படைக்கப்பட வேண்டும் அல்லது தீய தூதன் மனிதர்கள் வாழும் பூமியில் ஏன் தள்ளப்பட வேண்டும்?

4.இஸ்லாம் முறைப்படி பெருமையினால் காரணமாக கீழ்படியாத தூதன் "மனிதர்களை கெடுத்து காட்டுகிறேன்" என்று அவகாசம் கேட்டபோது அவர் அவகாசம் கொடுத்ததன் மூலம் மனித குலத்துக்குள் தீமையை அனுமதித்ததே இறைவன் தானா?

5.ஒரு கொலை குற்றவாளி நீதிபதியிடம் நான் எல்லோரையும் கொலைகாரனாக மாற்றி காட்டுகிறேன் என்று அவகாசம் கேட்டால் கொடுப்பாரா? இறைவன் ஏன் அனுமதி கொடுத்தார் மனிதர்களை நரகத்தில் போட்டு வேடிக்கை பார்க்கவா?
5.இந்து முறைப்படி தவறு செய்த தூதனுக்கு மனம் திரும்ப 7 யுகம் அவகாசம் ஏன் கொடுக்கப்பட்டது? அவனை தனிமையில் வைத்து திருத்தி பார்க்கலாமே!
6.ஏழு யுகத்தில் பிறந்தாலும் இவன் மனம் திரும்ப மாட்டான் என்பது இறைவனுக்கு தெரியாதா?
7.மனிதர்கள் வாழும் பூமியில் ஒரு தீயவனை பிறக்க வைத்து கொடுமை படுத்துவாரம் பிறகு இறைவன் அவதாரம் எடுத்து அவனை அழிப்பாரம் அதற்கு நம்மை போல பாவப்பட்ட மனிதர்களா கிடைத்தோம்
.

எதுவும் சரியான காரணமாக தெரியவில்லை தெரிந்தால் சற்று விளக்குங்கள்