Thursday, January 29, 2015

அப்பாவிகளே ஆண்டவரிடம் வந்துவிடுங்கள் இல்லையேல் உலகம் உங்களை அழித்துவிடும்!

இரண்டு வருடமாக ஒரு தெரு நாய்க்கு நான் சோறு போட்டு வளர்த்தேன். இரவு பதினோரு மணியானாலும் அதற்க்கு சாப்பாடு போடாமல் என்னால் தூங்க முடியாது.   

மிகவும் அப்பாவியான அந்த நாய் எதற்கும் முந்திக்கொண்டு நிற்காது. யாரோடும் போட்டி போட்டு திங்க வராது. பிற நாயின் குட்டியோடு  கூட தன குட்டிபோல விளையாடும்.  எல்லோரையும் நண்பனாகவே பாவிக்கும். எந்த பிற  நாயிடமும் சண்டைக்கு போக முற்படாது.
 
அந்த ஏரியாவில் உள்ள ஒரு ஸ்கூல் பிள்ளையை எதோ ஒரு நாய் கடித்துவிட்டதாக புகார் அனுப்பபட்டு, நாய்  பிடிக்க வந்த  நகராட்சி நாய் பிடிப்பவர்கள் வந்தவுடன்  எனக்கு மிகவும் பிடித்த குணாதிசயங்கள் கொண்ட அந்த நாயை நேற்று சுலபமாக பிடித்து கொண்டு போய்விட்டார்களாம்.  ஆனால் அங்கே  அலையும் அனேக கட்டுமிராண்டி நாய்களோ.  இந்த நாயை பிடிக்கும்போது போட்ட சப்தத்தில் உஷாராக ஓடி ஒளிந்து கொண்டுவிட்டன.
       
ஒரு  நல்ல நாயை கூட விட்டு வைக்காத உலகம் இது. ஆனால் துஷ்ட நாய்களோ சுலபமாக தப்பிவிடும் எங்காவது ஓடி ஒழிந்துவிடும். 
 
ஒருவேளை அந்த நாய் எங்கள் வீட்டுக்குள் இருக்கும் இடத்தில் படுத்து கிடந்திருந்தால் அது பிடிபட்டிருக்காது.   
 
மனுஷர்களுக்கும் இதேபோல்தான் 
 
இந்த பாவ உலகத்தில் தேவனின் துணையின்றி நல்லவனாக இருக்க முயன்றால் அவர் அதிகமாக எமாற்றப்படலாம் அநேகரால் வஞ்சிக்கபடலாம் பல்வேறு பழி சுமத்தப்படலாம் ஆனால் வஞ்சகரும் லஞ்சகர்களும், ஏமாற்றுபவரும் உஷார் பேர்வழிகளும் இங்கு உல்லாசமாக வாழலாம்.
 
ஏனென்றால் இந்த உலகம்  முழுவதும் சத்துருவின் பிடியில் பொல்லாங்குக்குள் கிடக்கிறது. 
 
I யோவான் 5:19  உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
 
எனவே அன்பானவர்களே நீங்கள் நல்லவராக வாழ விரும்பினால் நமக்காக ஜீவனை கொடுத்த ஆண்டவரை உங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்.  அவர்
 
மத்தேயு 28:20  இதோ, உலகத்தின்முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். 
 
இவ்வாறு  வாக்குகொடுத்துள்ளர். 
 
அவர் பிள்ளையாக நீங்கள் இருக்கும்போது சத்துரு உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது  
 
I யோவான் 4:4 ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
 
மற்றபடி ஆண்டவர் துணையின்றி நல்லவனாக வாழ விரும்பும் எவரையும் இந்த உலகம் விடுவதில்லை அனேக துன்பத்துக்குள் கொண்டுவந்து அலைக்கழிக்கும். 
 
 
"நான்  அவனுக்கு நல்லதையே  செய்யபோனேன் ஆனால் எனக்கு   இத்தனை துன்பங்கள் வந்தது இனி நான் ஏன்  நல்லது செய்ய வேண்டும்" என்று புலம்பும் அநேகரை நாம் பார்த்திருக்கிறோம்  
  
ஆண்டவரின் பாதுகாப்பில் இல்லாத எந்த ஒரு  நல்லவனையும் இந்த உலகம் ஓர்நாளில் கெட்டவனாக மாற்றியே தீரும்!  ல்லது தெரு நாயை  பிடித்து கொடுண்டுபோய் அழிப்பதுபோல் அழித்துவிடும்.    

Tuesday, August 19, 2014

என் கண்பார்வையை காத்துவரும் கர்த்தர்!

எனக்கு சுமார் 30 வயது இருக்கும்போது கண் பார்வை சற்று மங்கலாக தெரிந்தது. கண்ணை செக் செய்து ஒரு கண்ணாடி போட்டுக் கொண்டேன். காட்சிகள்  எல்லாமே மிக மிக தெளிவாக தெரிந்தது அனால் சில நாட்களில் ஆண்டவர் என்னோடு இடைபடவே கண்ணாடி போடுவதை நிறுத்திவிட்டேன்.
 
அந்நேரம் பல நண்பர்கள் என்னிடம் "ஒரு நாளில் சுமார் 8 மணி நேரம் கணினி முன் அமர்ந்திருக்கும் எனக்கு  கண்ணாடி போட வேண்டிய நேரத்தில் போடவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வையே போய்விடும்" என்று அதிகமாக பயம்காட்டினார்கள்
     
ஆனால் நானோ "ஆண்டவர் என்னை, எதை/ எவ்வளவு தூரத்தில்/ எப்படி பார்க்கவேண்டும் என்று வைத்திருக்கிறாரோ அப்படியே நான் பார்க்க விரும்புகிறேன். கண்ணாடி என்று ஒன்றை போட்டுகொண்டு என் கண்ணை நானே கூர்மையாக்கி, தேவன் தெளிவாக பார்க்கவேண்டாம் என்று எண்ணுவதை நான் தெளிவாக பார்க்கவிரும்பவில்லை என்று சொல்லி விட்டுவிட்டேன்.
   
ஆனால் இன்று சுமார் 19 வருடங்கள் ஆகிறது நானும் அதேபோல் தினமும் 8-10 மணிநேரம் கணினியை பார்த்து வேலை செய்கிறேன் என் கண்களில் எந்த பாதிப்பும் ஏற்ப்படவில்லை.
 
ஆனால் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் மீண்டும் எல்லா எழுத்துக்களும் பார்க்க முடியாதபடி மங்கலாக தெரிய ஆரம்பித்தது அதனால் வேலையில் ஒரு சின்ன மிஸ்டேக் கூட ஆகிவிட்டது. எனவே வயதாகிவிட்டது இனி கண்ணாடி போட்டுவிடலாமா என்று சற்றே தடுமாறிய நான் மீண்டும் விசுவாசத்தை பிடித்துகொண்டு  "எனக்கு /என் வேலைக்கு எப்படியான பார்வை தேவை என்பதை தேவன் அறிவார் அதை நிச்சயம் அவரால் தர முடியும் முடிந்தவரை நான் கண்ணாடி போடவே மாட்டேன்" என்று உறுதியாக விசுவாசித்து கண்ணாடி போடும் எண்ணத்தை உதறினேன்.
 
சில நாட்களிலேயே கண் பார்வை நல்ல நிலையை அடைந்தது.
 
மாற்கு 9:23 இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
 
உறுதியான விசுவாசத்துக்கு முன்னால் உலகமும் அதன் நடப்பும் எல்லாமே ஒரு மாயை! 

தேவனால் எல்லாவற்றையும் சரியாக மாற்றிவிட முடியும் என்ற உண்மையை அறிந்தால் எந்த சூழ்நிலையிலும் நாம் தடுமாறவே மாட்டோம்!
 
 மத்தேயு 19:26 தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.


Tuesday, August 5, 2014

துன்பங்கள் வேதனைகளுக்கு நிச்சயமாகவே முடிவு உண்டு!

சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் உலகில் நடக்கும் கொடுமை துன்பங்களிநிமிதம் அதிக துக்கத்துக்குள்ளாகி இந்த உலகத்தில் மீளமுடியாத துன்பம் வேதனையில் வாடும் மனுஷர்களை மீட்க வழியே இல்லையா? என்று ஆண்டவரை நோக்கி அழுது புலம்பியதோடு மும்பை தெருக்களில் இரவு பகல் என்று பாராது பரத்தோடு அலைந்து திரிந்து பிளாட் பாரத்தில் படுத்து கிடந்தவன் நான். 

அப்பொழுது ஆண்டவர் எனக்கு தெரிவித்தது "இந்த உலகில் தீமை எதனால் வந்தது வந்தது? மனுஷர்களை துன்பபடுத்தி அதில் இன்பம் காணும் சத்துருவால்தானே. அவன் ஜெயிக்கபட வேண்டும். மனுஷர்களை பாவம் செய்ய தூண்டுகிறான், பின்னர் அதற்க்கான தணடனையை பெற்று கொடுத்து பார்த்து ரசிக்கிறான்.

இன்றும் பலர் சொரனையே இல்லாமல் துர்நாற்றம் எடுக்கும் கூவத்தில் குழிப்பதுபோல், என்னவென்றே தெரியாமல் அனேக மனுஷர்கள் பாவத்தில் மூழ்கி அத்தோடு பழகிபோய், தாங்களும் இடறி இன்னும் அநேகரை இடரவைத்துகொண்டு சத்துருக்கு சகோதரராக இருக்கிறார்கள் அதில் அனேக கிறிஸ்த்தவர்களும் அடக்கம்

சத்துருவுக்கு மனுஷர்கள் மேலுள்ள அதிகாரம் பிடுங்கபட வேண்டும் என்று சொன்னதோடு, அதை நிறைவேற்ற ஒரே வழி: ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு ஆவியானவரின் துணையுடன் தேவன் எழுதிக்கொடுத்துள்ள வார்த்தைகளை கைகொண்டு வாழ்வது மட்டுமே. எனவேதான் நான் வேதம் முழுவதும் என் கற்பனைகளை கைக்கொள்ளுங்கள் என்று திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறேன்"

வெளி 22:14
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

என்று சொன்னதோடு, அதற்க்கான தொடர்புடைய வேத வசனங்களையும் விளக்கி காண்பித்தார்.

தேவன் தம் வார்த்தையை மாம்சமாக்கி தானே இங்கு வந்து 99% காரியங்களை செய்து முடித்துவிட்டார். வழிகளை ஏற்ப்படுத்தி கொடுத்தார், வாழ்ந்து காட்டிசென்றார், தம் ஆவியை தேற்றரவாளராக தந்துள்ளார். எனினும் மீதம் இருக்கும் அந்த சொற்ப செயலை செய்து முடித்து சத்துருவை ஜெயம்கொள்ள" முடியாத நிலையில் மனுஷன் இடறி விழுகிறான்.

சத்துருவை ஜெயம்கொள்ளும் வரை இந்த் உலகத்தில் துன்பம் ஒழியாது! 

மனுஷன், தேவனோடு கூட இணைந்து கீழ்படிந்து ஒத்துழைத்தாலன்றி இது நடக்காது. 

Matthew 19:26 - But Jesus beheld [them], and said unto them, With men this is impossible; but with God all things are possible

தேவனோடு இணைந்து அவர் சித்தத்துக்கு ஒப்புகொடுத்து செயல்பட்டால் எல்லாமே செய்ய முடியும். 

இயேசுவுக்காக மரிக்கவும் அநேகர் சித்தமாக இருக்கிறார்கள் ஆனால் இன்று தேவன் எதிர்பார்ப்பதோ "மரணமே வந்தாலும் நான் இயேசுவும் வார்த்தைகளை கைகொண்டு வாழ்வேன்" என்று அற்ப்பணிப்புடன் வாழ்வோரையே! அப்படிபட்டவர் யாரையும் பார்த்துள்ளீர்களா?  மரிக்க துணியும் நாம் அவர் வார்த்தையை கைக்கொள்ள மாத்திரம் முடியாமல் தவிக்கிரோமே ஏன்? 

"தன்னைப்போல (தன் பிள்ளைபோல) எல்லோரையும் நேசிக்க வேண்டும். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை திருப்பி கொடுக்க வேண்டும், உள்ளதை உள்ளதென்றும் இல்லத்தை இல்லதென்றும் பேசவேண்டும், நமக்குண்டானத்தை விற்று பிச்சை போட வேண்டும், இரண்டு அங்கி இருந்தால் ஒன்றை இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டும், கேட்பவனுக்கு கடன் கொடுக்க வேண்டும் அதை திருப்பி தருவார்கள் என்று எதிர்பாக்க கூடாது" இதுபோல் இன்னும் அநேகம் உண்டு.

இயேசுமேல் உயிரையும் வைத்திருக்கிறேன் அவருக்காக மரிக்கவும் ஆயத்தமாக இருக்கிறேன் என்று சொல்வோர்களே. உங்களை பார்த்து இயேசு சொல்லும் ஒரே வார்த்தை

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக்கைக்கொள்ளுவான், யோவான் 14:23 

"இல்லையெனில் நீ பொய்யன்" என்று வேதம் திட்டமாக சொல்கிறது. 

I யோவான் 2:4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

ஆம்! அவர் வார்த்தைகளை கைகொள்ள பிரயாசம் எடுக்காத நீங்கள் எல்லோருமே அவர்மேல் அன்பாயிருக்கிறேன் என்று பொய் சொல்லுகிறீர்கள். 

வசனம் மாறாதது! நாமோ சத்துருவால் வஞ்சிக்கபட்ட நிலையில் இருக்கிறோம். 

ஆகையால் நான் எல்லோருக்கும் சொல்வது ஒவ்வொருவரும் இன்னும் அதிகமாக விடாபிடியாக வேத வார்த்தைகளை உங்கள் வாழ்வில் கைகொண்டு வாழ பிரயாசம் எடுங்கள். 

உபவாசம் இருந்து விடலாம், காணிக்கை போட்டுவிடலாம், சபைக்கு தவறாமல் போய்விடலாம், பிரசங்கம் செய்துவிடலாம், பெரிய சபையை கட்டிவிடலாம் ஆனால் இயேசுவின் வார்த்தைகளை கைகொள்ளுவது அதிக கஷ்டம்தான் என்பது அனுபவிக்கும் எனக்கு தெரியாமலில்லை. மனைவி ஒத்துழைக்க மாட்டாள், பிள்ளைகள் திட்டுவார்கள். உலகம் உன்னை ஏமாளி என்று பரிகசிக்கும், எதோ வினோதமான பூச்சியை பார்ப்பதுபோல ஏளனமாகதான் உன்னை பார்க்கும். ஆனால் வேறு வழியில்லையே! 

ஆவியானவர் நிச்சயம் உதவி செய்வார். நம்மை சத்தியத்துக்குள் நடத்தவே அவர் அருளப்பட்டிருக்கிறார். அதற்க்கான தேவ பெலன் நமக்கு கொடுக்கப்படும்! 

நிச்சயமாகவே ஒரு விடிவும் ஒரு முடிவும் உண்டு! நம் நம்பிக்கை வீண் போகாது!

Wednesday, July 11, 2012

"இறைவன்" விவாத தளத்துக்கு வரவேற்கிறோம்

பல சில காரணங்களை கருத்தில் கொண்டு இந்த தளத்தில் பதிவிடப்பட்ட பதிவின் தொடர்ச்சிகள் வேறொரு விவாத தளத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன.

பல சில காரணங்களை கருத்தில் கொண்டு இந்த தளத்தில் பதிவிடப்பட்ட பதிவின் தொடர்ச்சிகள் வேறொரு விவாத தளத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன.

இறைவனை பற்றி மேலும் அறிய விரும்போவோர்கள் கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி தளத்தை  பார்வையிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 http://lord.activeboard.com/

Friday, December 10, 2010

நாம் யாரை தொழுதுகொள்ள வேண்டும்?

இயேசுவுக்கு ஜனங்கள் தன்னை யாரென்று சொல்கிறார்கள் என்பதை அறியவேண்டும் என்ற ஆவல் உண்டானது.

எனவே ஒருநாள்


மத்தேயு 16:13 இயேசு ...., தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
14. அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

ஜனங்களுக்கு இயேசுவைப்பற்றி சரியாக தெரியவில்லை போலும்! இயேசு அவர்களைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் தம்முடன் இருக்கும் சீஷர்களை நோக்கி.

15. : நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.

அங்கு பல சீஷர்களுக்கு அவர் யாரென்பது சரியாக தெரியவில்லை எனவே ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் பேதுரு மட்டும்

16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

அதைகேட்டு பரவசமடைந்த இயேசு "பிதாவாகிய தேவனே உனக்கு இதை வெளிப்படுத்தியிருக்கிறார்" என்று கூறி பாராட்டுகிறார்.

17. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

ஆனால் அவர் மற்ற சீஷர்களை பார்த்து என்னை நீங்கள் என் சரியாக கணிக்கவில்லை என்று பெரிதாக எதுவும் கடிந்துகொண்டதாக தெரியவில்லை.

இவ்வாறு பரலோக பிதாவினடத்தில் இருந்து இயேசுவை பற்றிய சரியான வெளிப்பாட்டை பெற்ற பேதுருவே, இயேசு சிலுவைப்பாடுகள் குறித்து பேசும் போது "அது சம்பவிக்க கூடாது" என்று கூறும்போது இயேசு சற்றும் தயங்காமல் "அப்பாலேபோ சாத்தனே!" என்று கடிந்துகொண்டார். அவன் தனைப்பற்றி சரியான வெளிப்பாட்டை பெற்றவன் என்பதற்காக் எந்த தயவு தாட்சண்யமும் காட்ட வில்லை. அவனை சாத்தான் என்று வெளிப்படையாக சொல்லி கடிந்துகொண்டார். ஏனெனில் அவருக்கு எல்லாவற்றையும்விட பிதாவின் சித்தம் நிறைவேற்றுவது தான் முக்கியமாக இருந்தது
.

இதை நன்கு ஆராய்ந்தால், இங்கு யார் இயேசுவை சரியாக கணித்தார்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல, நம் எல்லோரையும் விட சாத்தானுக்கு இயேசு யார அவரின் நிலை என்னவென்பது மிக நன்றாகவே தெரியும் எனவே இவ்வுலகில் யார் சரியான வெளிப்பாட்டை பெற்றார்கள் என்பது கணக்கே அல்ல! யார் தேவனின் சித்தத்துக்கு தங்களை ஒப்புகொடுக்கிரார்கள் என்பது மட்டும்தான் நிலை நிற்கும்.

இயேசு "தேவனால் அனுப்பபட்டு நம்முடைய பாவத்துக்காக பலியான கிருபாதார பலி" என்பதை ஏற்றுக்கொண்டு அவரை விசுவாசித்து பாவ மன்னிப்பை பெற்று தேவனுக்கு ஏற்ற பரிசுத்த ஜீவியம் செய்வதில்தான் முக்கியத்துவம் இருக்கிறதே தவிர, மற்ற காரியங்களை விவாதித்து சண்டை போட்டு சாபம்விடுவதில் அல்ல!

இயேசுவின் தாயார் ஒருமுறை அவரை பார்க்க வந்தபோது இயேசு மிக தெளிவாக சொன்ன இவார்த்தை:

லூக்கா 8:21 : தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.

அதைவிட முக்கியமாக மலைப்பிரசங்கத்தில் சொல்லபட்ட சாதாரண பாக்கியவாங்களைவிட அதிக பாக்கியவான் ஒருவனையும் இயேசு குறிப்பிடுகிறார்.

யார் அந்த அதிக பாக்கியவான் தெரியுமா?

11:28 ர்: தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

கேட்கிறதற்கு காதும் புரிகிறதர்க்கு இருதயமும் இருப்பவன் கேட்டுக்கொள்ள கடவன்!

நாம் யாரை தொழுதுகோள்கிறோம்?

சங்கீதம் 29:2 பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
ரோமர் 10:13 கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
மத்தேயு 4:10 உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

சங்கீதக்காரன், பவுல் மற்றும் இயேசுவின் வழிகாட்டுதலை கருத்தில் கொண்டு கர்த்தரை தொழுகோள்வோம்! சில சகோதரர்கள் சொல்வது போல அந்த கர்த்தர்தான் இயேசுவாக இருந்தால் அத்தொழுகை அவருக்கே போய் சேரட்டும்

அல்லது

யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்
பிலிப்பியர் 3:3 ஆவியினாலே தேவனுக்கு
ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்
வெளி 22:9 , இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.

ஆண்டவராகிய இயேசுவும் பவுலும் தேவ தூதர்களும் சொல்வதுபோல் தேவனை தொழுதுகொண்டு ஆராதனை செய்து, கிறிஸ்த்துவுக்கு கொடுக்கவேண்டிய கனத்தையும் மகிமையையும் செலுத்துவோம் ஒருவேளை சில சகோதரர்கள் சொல்வதுபோல் இயேசுவே தேவனாக இருந்தால் அதுவும் அவருக்கே போய் சேரும்.

அல்லது

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற வர்களாக இருந்தாலும் சரி

இங்கு இயேசு எந்தஒரு வருத்தமும் படப்போவது இல்லை!

Tuesday, November 17, 2009

அனுபவமாக்கப்படாத அறிவு ஆபத்தானது!

ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்தது. அந்த ஆற்றை கடந்து அக்கறை செல்வதற்காக வந்த பலர் பரிசல்காரன் இல்லாத காரணத்தால் அங்கு நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

அவர்களில் ஒரு இயற்பியல் பட்டம் படித்த ஒரு அறிவாளியும் இருந்தார். அவர் அங்கு நிற்ற மற்றவர்களிடம் "இந்த ஆற்றின் நீர் என்ன வேக அளவில் ஒடிகிறது தெரியுமா? இந்த ஆற்றின் மீது பரிசல் மிதந்து செல்வதற்கான விதி தெரியுமா? பரிசலை செலுத்துவதக்காக ஒருவர் பயன்படுத்தும் ஆற்றலில் அளவை கணக்கிட முடியுமா? என்ன வேகத்தில் சென்றல் எவ்வளவு நேரத்தில் அக்கறையை சேரமுடியும் என்று தெரியுமா? என்று கேள்விகளை அடுக்கிகொண்டே இருந்தார். அந்த கேள்விகளை எல்லாம் கூடியிருந்த பாமரமக்கள் ஒன்றும் புரியாமல் ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டு இருந்தனர்.
.
சிறுது நேரத்தில் பரிசல்ஒட்டி வரமாட்டன் என்று அறிவிப்பு வந்தது. உடனே
இந்த அனைத்தும் அறிந்த அறிவாளியை அழைத்து "உங்களுக்குத்தான் எல்லா விதியும் தெரிகிறதே இந்த பரிசலை ஒட்டி எங்களை அக்கறை சேர்த்துவிடுங்கள்" என்று கேட்டுக்கொண்டனர். அந்த அறிவாளியும் சற்று யோசித்துவிட்டு எல்லோரையும் பரிசலில் ஏற்றி ஆற்று நீரில் ஓட்ட ஆரம்பித்தார். எந்த அனுபவமும் இல்லாத அவர் பரிசலை சமநிலையில் ஓட்டமுடியாமல் தவித்ததொடு ஒரு சுழல் வந்தபோது அதிலிருந்து தப்பிக்க முடியாமல் மாட்டிக்கொள்ள பரிசல் கவிழ்ந்து எல்லோரும் பலியாகிபோனார்கள்.

இந்த கதையை பலர் கேட்டிருக்கலாம் அதாவது "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பதுபோல, என்னதான் பெரிய படிப்பு மற்றும் அறிவு இருந்தாலும் போதுமான முன் அனுபவம் இல்லாமல் ஒருவரால் மிக முக்கியமான காரியங்களில் ஈடுபட முடியாது என்பதை எல்லோருக்கும் எடுத்துரைக்கும் ஒரு அருமையான கதை.
.
அதுபோல்
.
ஒருவர் என்னதான் பல வேதங்களை படித்திருந்தாலும், அனேக உண்மைகளை ஐயமற அறிந்திருந்தாலும், அறிவால் ஆண்டவரின் கட்டளைகளை ஆயிரம் முறை ஆராய்ந்து பார்த்திருந்தாலும் அந்த வேதங்களை எழுதிக்கொடுத்த ஒப்பற்ற இறைவனின் பாதத்தில் அமர்ந்து ஆர்வமுடன் விசாரித்து தன புரிதல் சரியானதுதானா என்பதை விசாரித்து அதனை தன வாழ்க்கையில் அனுபவமாக்கவில்லை என்றால் அந்த படிப்பறிவால் எந்த பயனும் ஏற்ப்பாட்து!
வேதஅறிவால் கருத்துடன் பேசி காண்பவரை கவர்ந்துவிடலாம், அறியாதவர்களிடம் அற்ப்புதமாக பேசி அநேகரை குழப்பிவிடலாம், கூலி கொடுக்காமல் ஒரு கூட்டத்தையே சேர்த்துவிடலாம் ஆனால் அது இறுதியில் அனைத்தும் ஆபத்தையே விளைவிக்கும்!
.
இறைவன் இன்றும் என்றும் இருக்கிறவர். தன்னை தேடுபவருக்கு தவறாமல்
பதிலளிப்பவர்! பட்சபாதம் இல்லாமல் பாரிலுள்ள எல்லோரையும் ஏக சமமாக
பார்க்கிறவர்! படைத்துவிட்டு பாராமுகமாய் இருப்பவரல்ல! இன்னலில்
விட்டுவிட்டு இளைப்பாற போகிறவர் அல்ல!

அந்த அன்பான இறைவனிடம் அமர்ந்து கேளுங்கள்! உண்மை என்னவென்பதை உங்களுக்கு ஒரு நொடியில் விளங்க வைப்பார். மற்றபடி அறிவை பயன்படுத்தி ஆண்டவரை அறியவிரும்பினாலோ, ஆலயம்தவராமல் போய் வருவதாலோ, அடுத்தவர் சொல்லை கேட்டு ஆறு குளமென்று அலைவதாலோ உண்மையை ஒருபோதும் அறியவே முடியாது என்றே நான் கருதுகிறேன்!

Friday, September 25, 2009

தூக்கணாங் குருவிகளும் குரங்கும்!

ஒரு பனை மரத்தில் அனேக தூக்கனான் குருவிகள் கூடுகட்டி சந்தோசமாக வாழ்ந்து வந்தன. (தூக்கனான் குருவி பற்றியும் அதன் கூடு பற்றியும் எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். வீடுகளில் உள்ள சிட்டு குருவிபோல மிக சிறிய குருவி, பனைமர ஓலைகளில் சிறு சிறு வைக்கோல் பஞ்சுபோல் தொங்கும் அவை கட்டும் கூடுகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்)
.
ஒரு நாள் பெரிய மழை கொட்டியது! எல்லா குருவிகளும் தங்கள் தங்கள் கூட்டுக்குள் அமர்ந்துகொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன. அப்பொழுது ஒரு குரங்கு மழையில் நனைத்துக்கொண்டு ஒதுங்க இடமில்லால் ஓடி வந்து அந்த பனை மரத்தின் கீழ் மழைக்கு ஒதுங்கியது.
.
பனைமர கூரையில் சரியாக ஒதுங்க முடியாமல் குரங்கு மழையில் நனைவதை பார்த்த குருவிகள் அந்த குரங்கை பார்த்து "குரங்கே நீ இவ்வளவு பெரிய உருவமாய் இருக்கிறாயே, ஏன் உனக்கு ஒரு கூடுகட்டி அதில் வசிக்க கூடாது? எங்களை பார் இவ்வளவு சிறிய உருவமாக் இருந்தும் மழை வெயிலுக்கு ஒதுங்க ஒரு அருமையான வீட்டை கட்டியிருக்கிறோம். நீயும் அதுபோல் செய்து பாதுகாப்பாக வாழலாம் அல்லவா" என்று மிகுந்த பரிதாபத்தோடு அதற்க்கு ஒரு அறிவுரை கூறியது.
.
குரங்கு அதற்க்கு பதில் ஏதும் சொல்லவில்லை
.
சிறிது நேரத்தில் மழை நின்றது. உடனே அந்த குரங்கு அவசர அவசரமாக பனை மரத்தில் தாவி ஏறியது அதை கண்டு பயந்து பறந்த குருவிகள் பார்த்து "ஊசி மூஞ்சு மூடா, எனக்கு கூடு கட்டதெரியாது, கூட்டை பிரித்து எரியதான் தெரியும்" என்று கடும் கோபத்தோடு கூறியதோடு எல்லாகுருவிக்கூட்டையும் பிய்த்து தூர எரிந்தது!
அந்தோ! அறிவுரை கூறிய குருவிகள் எல்லாம் அலறியடித்துக்கொண்டு பறந்தன!
.
ஆம்!
"முத்துபோன்ற நல்ல அறிவுறையானாலும் அது மூடர்களுக்கு சொல்லப்பட்டால் அதனால் எந்த நன்மையும் ஏற்ப்படாததொடு அதை சொல்பவருக்கே தீங்கை வருவிக்கலாம்" என்ற அருமையான நீதியை சொல்லும் ஒரு சிறுகதை இது
.
சில வருட்கங்களுக்கு முன் நான் ஒரு முதலாளியிடம் வேலை பார்த்தேன். அவர் மிகுந்த கோபக்காரர். வேலையாட்களை குறை கண்டுபிடிப்பதும் மிக கடுமையாக திட்டுவதும் அவரது வாடிக்கையான செயல்கள். நான் உண்மை நேர்மை என்று மிக சரியாக நடப்பதால் என்னை அவர் திட்டுவது இல்லை. எனவே சக வேலையாட்கள் என்னிடம் அடிக்கடி அவரை குறைசொல்லி புலம்புவதுண்டு.. நாளாக ஆக ஆக அவரின் அர்ச்சனை தாங்க முடியாமல் ஒவ்வொருவராக வேலையை விட்டு போய்விட்டனர். நானும் வேறு இடத்துக்கு சென்றாலும் பகுதிநேர வேலையாக அவரிடம் போவதுண்டு.
.
ஒருநாள் அவர் என்னிடம் வேலைக்கு ஆள் இல்லாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது யாராவது நல்ல ஆள் இருந்தால் சொல்லுங்கள் என்று பேசிக்கொண்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய நான் "சார் நீங்கள் வேலைக்கு வருபவர்களை சற்று இலகுவாக கையாள வேண்டும்" என்றேன். உடனே அவர் சொல்லுங்க நேசன் என்னிடம் என்னென்ன குறை உள்ளது என்று ஆவலோடு கேட்க, நானும் அவரிடம் உள்ள உண்மை குறைகளை சொல்லி இதெயெல்லாம் நீங்கள் மாற்றவேண்டும் என்று எடுத்துரைத்தேன். நான் சொல்வதஎல்லாம் பொறுமையாக கேட்டுவிட்டு அவர் சொன்ன பதில்
.
"மற்றவர்களைபோல உங்களை நடத்தாமல் கொஞ்சம் அன்போடு பேசினால் என்னிடமே குற்றம் கண்டுபிடிக்கிறீர்களா? நாளையில் இருந்து எனது காம்பவுண்டு சுவருக்குள் உங்கள் கால்படக்கூடாது, வெளியே போங்கள்" என்று கோபமாக திட்டிவிட்டார்.
.
"பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்". என்று இயேசு சொன்ன வார்த்தைகளை நினைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு கடந்துபோனேன்.