இன்றைய உலகில் உள்ள பல நல்ல மனிதர்கள் கூட, பிறருக்கு கேடு தீங்கு செய்யும் பிற மனிதர்களை கருத்தில் கொண்டு, உலகமே கெட்டு கிடக்கிறது இதில் நான் மட்டும் இப்படி நேர்மையாக வாழ முடியாது, அப்படி நேர்மையாக வாழ்ந்துதான் என்னபயன்.என்று அக்கலாய்க்கும் வார்த்தைகளை அடிக்கடி கேட்க முடியும்.
.
இது சரியான ஒரு வார்த்தையா?
.
மிகப்பெரியா காரிருளில் ஒரே ஒரு சிறு விளக்கை ஏற்றி வைத்தால் அதன் வெளிச்சம் நிச்சயம் பலருக்கு பயனுள்ளதாக அமையும் உலகில் உள்ள அத்தனை இருளும் ஒன்றாய் சேர்ந்தாலும் அந்த விளக்கின் வெளிச்சத்தை ஒன்றுமே செய்யமுடியாது மேலும் இருட்டில் தடுமாறும் பலருக்கு சரியான வழியை கண்டுபிடிக்க பேருதவியாக இருக்கும்.
அதுபோல்
.
இந்த அநியாயம் அக்கிரமம் சுயநலம் நிறைத்த உலகில் ஒரே ஒருவர் இறைவனுக்கேற்ற பரிசுத்தமாக வாழ்ந்தாலும் அவரை எத்தனை அநியாயகாரர்கள் ஓன்று சேர்ந்தாலும் ஒன்றுமே பண்ணிவிட முடியாது! அவருடைய நற்பண்புகள் ஒரு விளக்கை போல வெளிச்சத்தை தருவதோடு இறைவனை தேடும் ஆவலுள்ள பலருக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
.
நீதி நேர்மையான உத்தமம் நிறைந்த வாழ்க்கை ஒருபோதும் பயனற்றதாக போகாது! எனவே நீதி நேர்மையைவிட்டு விலகாத ஒரு பரிசுத்த வாழ்க்கையை எப்பொழுதும் வாஞ்சித்து பின்பற்றுவோமாக!