Tuesday, November 17, 2009

அனுபவமாக்கப்படாத அறிவு ஆபத்தானது!

ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்தது. அந்த ஆற்றை கடந்து அக்கறை செல்வதற்காக வந்த பலர் பரிசல்காரன் இல்லாத காரணத்தால் அங்கு நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

அவர்களில் ஒரு இயற்பியல் பட்டம் படித்த ஒரு அறிவாளியும் இருந்தார். அவர் அங்கு நிற்ற மற்றவர்களிடம் "இந்த ஆற்றின் நீர் என்ன வேக அளவில் ஒடிகிறது தெரியுமா? இந்த ஆற்றின் மீது பரிசல் மிதந்து செல்வதற்கான விதி தெரியுமா? பரிசலை செலுத்துவதக்காக ஒருவர் பயன்படுத்தும் ஆற்றலில் அளவை கணக்கிட முடியுமா? என்ன வேகத்தில் சென்றல் எவ்வளவு நேரத்தில் அக்கறையை சேரமுடியும் என்று தெரியுமா? என்று கேள்விகளை அடுக்கிகொண்டே இருந்தார். அந்த கேள்விகளை எல்லாம் கூடியிருந்த பாமரமக்கள் ஒன்றும் புரியாமல் ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டு இருந்தனர்.
.
சிறுது நேரத்தில் பரிசல்ஒட்டி வரமாட்டன் என்று அறிவிப்பு வந்தது. உடனே
இந்த அனைத்தும் அறிந்த அறிவாளியை அழைத்து "உங்களுக்குத்தான் எல்லா விதியும் தெரிகிறதே இந்த பரிசலை ஒட்டி எங்களை அக்கறை சேர்த்துவிடுங்கள்" என்று கேட்டுக்கொண்டனர். அந்த அறிவாளியும் சற்று யோசித்துவிட்டு எல்லோரையும் பரிசலில் ஏற்றி ஆற்று நீரில் ஓட்ட ஆரம்பித்தார். எந்த அனுபவமும் இல்லாத அவர் பரிசலை சமநிலையில் ஓட்டமுடியாமல் தவித்ததொடு ஒரு சுழல் வந்தபோது அதிலிருந்து தப்பிக்க முடியாமல் மாட்டிக்கொள்ள பரிசல் கவிழ்ந்து எல்லோரும் பலியாகிபோனார்கள்.

இந்த கதையை பலர் கேட்டிருக்கலாம் அதாவது "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பதுபோல, என்னதான் பெரிய படிப்பு மற்றும் அறிவு இருந்தாலும் போதுமான முன் அனுபவம் இல்லாமல் ஒருவரால் மிக முக்கியமான காரியங்களில் ஈடுபட முடியாது என்பதை எல்லோருக்கும் எடுத்துரைக்கும் ஒரு அருமையான கதை.
.
அதுபோல்
.
ஒருவர் என்னதான் பல வேதங்களை படித்திருந்தாலும், அனேக உண்மைகளை ஐயமற அறிந்திருந்தாலும், அறிவால் ஆண்டவரின் கட்டளைகளை ஆயிரம் முறை ஆராய்ந்து பார்த்திருந்தாலும் அந்த வேதங்களை எழுதிக்கொடுத்த ஒப்பற்ற இறைவனின் பாதத்தில் அமர்ந்து ஆர்வமுடன் விசாரித்து தன புரிதல் சரியானதுதானா என்பதை விசாரித்து அதனை தன வாழ்க்கையில் அனுபவமாக்கவில்லை என்றால் அந்த படிப்பறிவால் எந்த பயனும் ஏற்ப்பாட்து!
வேதஅறிவால் கருத்துடன் பேசி காண்பவரை கவர்ந்துவிடலாம், அறியாதவர்களிடம் அற்ப்புதமாக பேசி அநேகரை குழப்பிவிடலாம், கூலி கொடுக்காமல் ஒரு கூட்டத்தையே சேர்த்துவிடலாம் ஆனால் அது இறுதியில் அனைத்தும் ஆபத்தையே விளைவிக்கும்!
.
இறைவன் இன்றும் என்றும் இருக்கிறவர். தன்னை தேடுபவருக்கு தவறாமல்
பதிலளிப்பவர்! பட்சபாதம் இல்லாமல் பாரிலுள்ள எல்லோரையும் ஏக சமமாக
பார்க்கிறவர்! படைத்துவிட்டு பாராமுகமாய் இருப்பவரல்ல! இன்னலில்
விட்டுவிட்டு இளைப்பாற போகிறவர் அல்ல!

அந்த அன்பான இறைவனிடம் அமர்ந்து கேளுங்கள்! உண்மை என்னவென்பதை உங்களுக்கு ஒரு நொடியில் விளங்க வைப்பார். மற்றபடி அறிவை பயன்படுத்தி ஆண்டவரை அறியவிரும்பினாலோ, ஆலயம்தவராமல் போய் வருவதாலோ, அடுத்தவர் சொல்லை கேட்டு ஆறு குளமென்று அலைவதாலோ உண்மையை ஒருபோதும் அறியவே முடியாது என்றே நான் கருதுகிறேன்!