Friday, September 25, 2009

தூக்கணாங் குருவிகளும் குரங்கும்!

ஒரு பனை மரத்தில் அனேக தூக்கனான் குருவிகள் கூடுகட்டி சந்தோசமாக வாழ்ந்து வந்தன. (தூக்கனான் குருவி பற்றியும் அதன் கூடு பற்றியும் எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். வீடுகளில் உள்ள சிட்டு குருவிபோல மிக சிறிய குருவி, பனைமர ஓலைகளில் சிறு சிறு வைக்கோல் பஞ்சுபோல் தொங்கும் அவை கட்டும் கூடுகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்)
.
ஒரு நாள் பெரிய மழை கொட்டியது! எல்லா குருவிகளும் தங்கள் தங்கள் கூட்டுக்குள் அமர்ந்துகொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன. அப்பொழுது ஒரு குரங்கு மழையில் நனைத்துக்கொண்டு ஒதுங்க இடமில்லால் ஓடி வந்து அந்த பனை மரத்தின் கீழ் மழைக்கு ஒதுங்கியது.
.
பனைமர கூரையில் சரியாக ஒதுங்க முடியாமல் குரங்கு மழையில் நனைவதை பார்த்த குருவிகள் அந்த குரங்கை பார்த்து "குரங்கே நீ இவ்வளவு பெரிய உருவமாய் இருக்கிறாயே, ஏன் உனக்கு ஒரு கூடுகட்டி அதில் வசிக்க கூடாது? எங்களை பார் இவ்வளவு சிறிய உருவமாக் இருந்தும் மழை வெயிலுக்கு ஒதுங்க ஒரு அருமையான வீட்டை கட்டியிருக்கிறோம். நீயும் அதுபோல் செய்து பாதுகாப்பாக வாழலாம் அல்லவா" என்று மிகுந்த பரிதாபத்தோடு அதற்க்கு ஒரு அறிவுரை கூறியது.
.
குரங்கு அதற்க்கு பதில் ஏதும் சொல்லவில்லை
.
சிறிது நேரத்தில் மழை நின்றது. உடனே அந்த குரங்கு அவசர அவசரமாக பனை மரத்தில் தாவி ஏறியது அதை கண்டு பயந்து பறந்த குருவிகள் பார்த்து "ஊசி மூஞ்சு மூடா, எனக்கு கூடு கட்டதெரியாது, கூட்டை பிரித்து எரியதான் தெரியும்" என்று கடும் கோபத்தோடு கூறியதோடு எல்லாகுருவிக்கூட்டையும் பிய்த்து தூர எரிந்தது!
அந்தோ! அறிவுரை கூறிய குருவிகள் எல்லாம் அலறியடித்துக்கொண்டு பறந்தன!
.
ஆம்!
"முத்துபோன்ற நல்ல அறிவுறையானாலும் அது மூடர்களுக்கு சொல்லப்பட்டால் அதனால் எந்த நன்மையும் ஏற்ப்படாததொடு அதை சொல்பவருக்கே தீங்கை வருவிக்கலாம்" என்ற அருமையான நீதியை சொல்லும் ஒரு சிறுகதை இது
.
சில வருட்கங்களுக்கு முன் நான் ஒரு முதலாளியிடம் வேலை பார்த்தேன். அவர் மிகுந்த கோபக்காரர். வேலையாட்களை குறை கண்டுபிடிப்பதும் மிக கடுமையாக திட்டுவதும் அவரது வாடிக்கையான செயல்கள். நான் உண்மை நேர்மை என்று மிக சரியாக நடப்பதால் என்னை அவர் திட்டுவது இல்லை. எனவே சக வேலையாட்கள் என்னிடம் அடிக்கடி அவரை குறைசொல்லி புலம்புவதுண்டு.. நாளாக ஆக ஆக அவரின் அர்ச்சனை தாங்க முடியாமல் ஒவ்வொருவராக வேலையை விட்டு போய்விட்டனர். நானும் வேறு இடத்துக்கு சென்றாலும் பகுதிநேர வேலையாக அவரிடம் போவதுண்டு.
.
ஒருநாள் அவர் என்னிடம் வேலைக்கு ஆள் இல்லாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது யாராவது நல்ல ஆள் இருந்தால் சொல்லுங்கள் என்று பேசிக்கொண்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய நான் "சார் நீங்கள் வேலைக்கு வருபவர்களை சற்று இலகுவாக கையாள வேண்டும்" என்றேன். உடனே அவர் சொல்லுங்க நேசன் என்னிடம் என்னென்ன குறை உள்ளது என்று ஆவலோடு கேட்க, நானும் அவரிடம் உள்ள உண்மை குறைகளை சொல்லி இதெயெல்லாம் நீங்கள் மாற்றவேண்டும் என்று எடுத்துரைத்தேன். நான் சொல்வதஎல்லாம் பொறுமையாக கேட்டுவிட்டு அவர் சொன்ன பதில்
.
"மற்றவர்களைபோல உங்களை நடத்தாமல் கொஞ்சம் அன்போடு பேசினால் என்னிடமே குற்றம் கண்டுபிடிக்கிறீர்களா? நாளையில் இருந்து எனது காம்பவுண்டு சுவருக்குள் உங்கள் கால்படக்கூடாது, வெளியே போங்கள்" என்று கோபமாக திட்டிவிட்டார்.
.
"பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்". என்று இயேசு சொன்ன வார்த்தைகளை நினைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு கடந்துபோனேன்.

1 comment:

chillsam said...

எப்படியிருக்கீங்க,நண்பரே..?
ஏன் நமது தளத்துக்கு வருவதில்லை..?