Wednesday, June 4, 2008

அறிந்தோருக்கு ஒருவரே இறைவன். அறியாதோருக்கு எல்லாமே இறைவன்!

அன்பர்களே!

எனக்கு திரு.முருகன் என்றொரு கம்பனி செக்ரடரியுடன் இரண்டு வருடங்களாக தொடர்பு இருந்தது. நான் அவரை நேரில் பார்த்தது இல்லை ஆனால் தொலை பேசி மற்றும் மின் அஞ்சல் தொடர்பு தான் உண்டு.

அவர்களின் பெயருக்கு பின்னால் சுமார் 15எழுத்து அதாவது BCOM,ACA,ACS,MSC என்றெல்லாம் பட்டம் இருப்பதையும் அவர் குரல் மற்றும் பேசும் திறன் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு அவர் இப்படித்தான் இருக்க வேண்டும், அல்லது இப்படி இருக்க வேண்டும் என்றொரு கற்பனை என் மனதில் இருந்தது.

ஆனால் ஒருநாள் அவரை நான் சந்திக்க நேர்ந்த போது நான் எதிற்பர்த்த்ததற்கு சற்றும் பொருத்தம் இல்லாத ஒரு வித்யாசமான நல்ல நபரை கண்டேன். அதற்குபின் அவரை பற்றி எனக்கு கற்பனை இல்லை ஏனெனில் அவர் உண்மையில் எப்படி இருந்தார் என்பதை நான் கண்டுகொண்டேன்.


அதுபோல மனிதனும், இறைவனின் குணாதிசயங்கள், அவரின் படைப்புகள் மற்றும் ஞானம் இவற்றை கருத்தில் கொண்டு அவரின் உண்மை தன்மையை அறியாமல், இதுதான் அவர், அது தான் அவர் அவர் இப்படித்தான் இருப்பார் அல்லது அப்படி இருப்பார் அல்லது அப்படி ஒருவர் இல்லவே இல்லை என்றெல்லாம் பலவிதமாக அனுமானித்து ஒரு கருத்தை கூறுகின்றனர் .


  • பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
  • பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம்
  • கொட்டும் மழையில் கூறை தெய்வம்
  • கோடை வெயிலின் நிழலே தெய்வம்

என்றெல்லாம் பாடல் பாடி உள்ளனர்.

ஆனால் இந்த உலகில் உண்மை இறைவனை கண்டவர்கள் நிலை என்ன? உலக சுகத்தையும், உணவையும், உறக்கத்தயுமா விரும்பினார்கள்?

சுண்ணாம்பு காளவாயிலில் போட்டு நீற்றும் போது "மாசில் வீணையும் மாலை மதியமும்" என்று பாடல் பாடினார்.

ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் எரிகின்ற அக்கினியில் போட்டாலும் எங்கள் தேவனை தவிர வேறு ஒரு தேவனை கும்பிட மாட்டோம் என்று மார் தட்டினர்.

பைபிளை மொழி பெயர்த்த காரணத்துக்காக உயிரோடு வைத்து தீ கொளுந்த்டப்பட்ட வில்லியம் தன் கடைசி மூச்சு இருக்கும் வரை இறைவனை மறுதலிக்க வில்லை.

சுகமான வாழ்க்கையை உதறிவிட்டு காலமெல்லாம் குஷ்ட்டரோகிகளுக்கு சேவை செய்வதற்கே அற்பணித்தார்கள் அன்னை தெரசா அவர்கள்.


இப்படி தன்னையே தியாகம் செய்த எத்தனையோ பேரை அடுக்கிக்கொண்டே போகலாம்

இறைவனை அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் வித்தியாசம் இதுதான்.

இறைவனை அறியாதோருக்கு இந்த உடம்பின் தேவைகளே இறைவன்!

இறைவனை அறிந்தவர்களுக்கு இந்த உடம்பும் இந்த உலகமும் ஒரு பொருட்டே அல்ல.


எனவே ஒரே இறைவனை அறிவோம்! உலக மாயையை வெல்வோம்!





No comments: