அன்பர்களே!
இந்த உலகம் எப்படி உருவானது என்பது சம்பந்தமாக பல்வேறு தரப்பினரிடையே வெவ்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன.
அறிவியல் அரச்சியாளர்கள் "பெரு வெடிப்பு கொள்கை" என்றொரு கொள்கையை "அதாவது முன்னொரு காலத்தில் நெபுலா என்றொரு மிகப்பெரிய நட்சத்திரம் வெடித்து சிதறியதால் தான் இந்த உலகம் மற்றும் எல்லா கோள்களும் உண்டானதாகவும் பின்பு இந்த உலகில் உயிர்கள் தோன்றி தானாக வளர்ந்ததாகவும் பரவலாக நம்புகின்றனர்.
ஆனால் இந்த உலகில் உள்ள ஒவ்வொன்றையும் கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால் இது ஒரு மிகப்பெரிய வல்லுனரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதை சுலபமாக புரிந்துகொள்ள முடியும்.
நாம் வாழும் இந்த பூமி உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ப சூரியனில் இருந்து சரியான தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பூமி சூரியனை 23 1/2 டிகிரி சாய்வாக நீள் வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருவதால் பருவ காலங்களில் மற்றம் ஏற்படுகிறது.
மனிதனின் அத்யாவசிய பொருளான காற்று நீர் எல்லாமே மறு சுழர்ச்சி முறையில் திரும்ப திரும்ப பூமியில் உருவாகி கொண்டே இருக்கிறது.
மனிதன் சுவாசிக்கும் காற்றை தாவரங்கள் கொடுக்கின்றன தாவரங்களுக்கு தேவையான காற்றை மனிதன் வெளியிடுகின்றான் இது ஒரு சமநிலையை ஏற்படுத்துகிறது.
இந்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் தன் இனத்தை பெருக்க திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கும் விதம் மிக மிக அதிசயம். உதாரணமாக எருக்கு செடியை எடுத்துக்கொள்ளுங்கள் அதன் காய் சரியாக காற்று அடிக்கும் காலத்தில்தான் வெடித்து சிதறும் அதன் விதையோடு உள்ள பஞ்சு போன்றபொருள் அதை காற்றின் மூலம் பல்வேறு இடத்துக்கு எடுத்து செல்கிறது இதுபோல் ஒவ்வௌன்றும் ஒவ்வொரு விதத்தில் பரவுகிறது
இப்படி எத்தனையோ அடுக்கிக்கொண்டே போகலாம்
அதுபோல் மனிதன் உருவாக்கப்பட்ட விதமும் ஒரு மிகப்பெரிய அதிசயமே!
கண், காதுகளின் அமைப்பு, கைவிரல்கள், பல் தாடைகள் போன்ற மனிதனின் ஒவ்வொரு உறுப்புகளின் அமைப்பும் மிக நேர்த்தியாக மனிதனின் தேவைகளை நிறைவேற்ற தகுந்தபடி மிகவும் அதிசயமாக அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு என் ஒரு குழந்தையானது பூமியில் பிறக்கும் முன்னரே அதற்கு தேவையான உணவு அதன் தாயிடம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அஹா எவ்வளவு அருமையாக இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளது இது தானாக உருவனானது என்று சொல்வதில் எந்த உண்மையும் இருக்கவே முடியாது!
ஒருவன் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு செல் போனை தனது நண்பரிடம் காட்டினார். உடனே அந்த நண்பர் இந்த செல்போன் மிகவும் அழகாக உள்ளது நான் இதுபோல் ஒன்று வாங்க வேண்டும் எது எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டாராம். உடனே செல்போன்காரர் இதை நீங்கள் எங்குமே வாங்க முடியாது. எனது அலுவலகம் பக்கத்தில் ஒரு ஏலக்ட்ரானிக் கம்பனி ஒன்று இருந்தது அது ஒருநாள் திடீன் என்று வெடித்து சிதறியது அப்பொழுது அதில் உள்ள பல பொருட்கள் ஒன்று சோர்ந்து இப்படி ஒரு செல்போன் தானாக உருவாகி எனக்கு பக்கத்தில் வந்து விழுந்தது என்று சொன்னால் எப்படி நம்ப முடியாதோ
அதுபோல் உந்த உலகம் ஒரு விபத்தால் தானாக உருவானது என்பது கொஞ்சமும் நம்ப முடியாத ஒரு விஷயம். கலை இந்த உலகம் என்பது இறைவன் என்ற ஒரு கைதேர்ந்த கலைஞரால் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டது என்பதே மறுக்கமுடியாத உண்மை!
இந்த பதிப்பு சம்பந்தமாக நடந்த உரையாடல்கள்
அன்பு நண்பர் சுந்தர்,
இறைவன் என்பது ஒரு தத்துவம். இறைவன் என்பவன் தனியான ஒருவன் அல்ல. இவ்வுலகிலுள்ள அனைத்து சக்திகளும் ஒன்று சேர்ந்த வடிவம் தான் இறைவன். ஒரு தேன்கூடு உருவாகப் பல தேனீக்கள் ஒன்றுபடடு உழைத்தால் தான் முடியும். ஒரு கட்டடம் உருவாகப் ல கட்டடக் கலைஞர்களும் தொழிலாளர்களும் ஒன்றுபட்டால்தான் இயலும். நாம் இன்று ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள உதவும் கணினி உருவானது பல்லாயிரம் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒன்றுபட்ட உழைப்பினால்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வாறிருக்க உலகமும் அவற்றிலுள்ள ஒவ்வொரு கோள்களும் அவற்றின் செயல்பாடுகளும், உயிர்கள் தோன்றுவதும், வளர்வதும், மறைவதும் ஒருவரால் எப்படி சாத்தியம்?
இறை என்பது ஒன்று என்று கொள்ள வேண்டுமானால் அதில் அனைத்தும் அடக்கம். நாம் வேறு இறைவன் வேறு அல்ல என்பதே அதன்பொருள். இறைவனில் நாமும் ஒரு சிறிய பகுதி அவ்வளவே.
இயற்கையின் ரகசியத்தைக் கண்டு விளக்குவதென்பது நமது சிற்றறிவுக்கெட்டாத ஒன்று. இதனை நாம் அதிசயத்தோடு வியந்து நோக்கத்தான் முடியும். விளங்காத வியப்பு!!
AKR
உங்களின் இந்த கருத்தில் எனக்கு மாற்று கருத்து இல்லை. எல்லா சக்திகளையும் தொகுப்பாக தன்னிடத்தில் கொண்டவர் இறைவன்
நீங்கள் சொல்வது போல் ஒரு பொருள் உருவாக பலரது கூட்டு முயற்சி தேவைப்பட்டாலும் ஒரு ராணி தேனியால்தான் ஒரு தேன்கூடு உருவாவது போல் எந்த ஒரு பொருளுக்கும் கண்டிபிடித்தவர் என்று ஒருவர் கண்டிப்பாக இருப்பார். அதுபோல் இந்த உலகத்திலும் பலவாறு காரியங்கள் பலரால் நடைபெற்றாலும் அதற்கு மூல ஆதாரம் இறைவன் என்ற ஒருவரே!
நீங்கள் சொல்வது போல் ஒரு பொருள் உருவாக பலரது கூட்டு முயற்சி தேவைப்பட்டாலும் ஒரு ராணி தேனியால்தான் ஒரு தேன்கூடு உருவாவது போல் எந்த ஒரு பொருளுக்கும் கண்டிபிடித்தவர் என்று ஒருவர் கண்டிப்பாக இருப்பார். அதுபோல் இந்த உலகத்திலும் பலவாறு காரியங்கள் பலரால் நடைபெற்றாலும் அதற்கு மூல ஆதாரம் இறைவன் என்ற ஒருவரே!
SUNDAR
அன்பு சுந்தர் அவர்களே,
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.
இயற்கையில் காணும் ஒவ்வொரு உயிரினத்தையும் பார்க்கும் போது அவற்றைப் படைத்த சக்தியை, இறைவனை, நாம் காணமுடியும் சற்றே உன்னிப்பாகப் பார்த்தால்.
சார்லஸ் டார்வின் 'பல்வேறு பட்ட உயிரினங்களின் தோற்றமும், தானாக தன்னை மாற்றிக் கொள்ளுதலும்' (Origin of Species and the Theory of Natural Selection) என்பது பற்றி பேசினார், எழுதினார். அவர் உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானி உயிரினங்களைப் பொருத்த மட்டில். உயிரியலின் தந்தை.
அவர் கூற்றிலே எனக்கு ஒரு சந்தேகம். சூழ் நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டதால் தான் பல்வேறு உயிரினங்களும் தோன்றின என்றால் ஆர்க்டிக் ஆலாவோ (Arctic Tern) அல்லது மற்ற வலசை போகும் பறவைகளோ (Migratory birds) ஏன் வருடா வருடம் பல ஆயிரம் மைல்கள் பறப்பதை விட்டுத் தங்களை சூழ்னிலைக்கேற்ப மாற்றிக் கொண்டு ஒரே இடத்தில் இருந்து விடக் கூடாது?
வட அமெரிக்காவில் வாழும் பக்கி (Nightjar or Poor will) என்ற பறவை குளிர் நாட்கள் வந்தால் கிட்டத் தட்ட மூன்று மாதங்களுக்கு உணவு உட்கொள்ளாமல் தூங்கி விடுகிறது. ஏன் மற்றப் பறவைகளும் இப்படியே செய்து விடலாமே. பல ஆயிரம் மைல்கள் பறந்து இடம் பெயர்ந்து வாழ வேண்டாமே? ஏன் செய்வதில்லை? (நம் நாட்டில் காணப்படும் பக்கி வருடம் பூராவுமே இங்கேயே இருக்கும்)
சால்மன் என்றொரு வகை மீன். வட அமெரிக்காவில் உள்ள நதிகளில் பிறக்கிறது. பின் சில மாதங்களில் கடலை அடைந்து பல ஆயிரம் மைல்கள் நீந்தி உலகின் பல பகுதிகளிலும் வாழ்கின்றன. சுமார் நான்காண்டுகளுக்குப் பின் அவை ஒவ்வொன்றும் தான் பிறந்த் அதே நதியின் முகத் துவாரத்தின் அதே பகுதிக்கு வந்து முட்டை இடுகின்றன. இது ஏன்? எப்படி அவை தான் பிறந்த வீட்டினைக் கண்டு கொள்கின்றன?
உயிர் வாழ்வன ஒவ்வொன்றையும் உற்று நொக்கினால் அவற்றை படைத்த இறைவன் நம் கண்களுக்குத் தெரிவான்.
நடராஜன்
ஒரு கம்பெனியில் அனைத்து அதிகாரங்களும் கொண்ட தலைமை ஒன்று உண்டென்றாலும் கம்பெனியின் செயல்பாடுகள் பற்றிய அனைத்து முடிவுகளையும் அவர் எடுப்பததில்லை, எடுக்கவும் முடியாது. எனவே தான் அவவருக்குக் கீழ் பல உயர் அதிகாரிகளும் உயர் அதிகாரி ஒவ்வொருவரின் கீழும் உப அதிகாரிகள் பலரும் இருக்கும் வண்ணம் கம்பெனி அமைக்கப் படுகிறடது. அது மட்டுமின்றி ஒவ்வொரு தொழிலாளியும் தன் பணியில் தவறுகள் நேராமலும் குறித்த வண்ணம் பணி நிறைவேறவும் தக்க முடிவுகளைத் தானே எடுப்பது நடைமுறையாகும். இதுபோலவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சக்தியுண்டு. அச்சக்தியை அதிகமாக்கி பொருளாதர வாழ்வில் உயர்நிலையை எய்துதல் போலவே ஆன்மாவின் சக்தியை அதிகப்படுத்தி உலகைக் கட்டுப்படுத்தும் செயலிலும் உயர்வெய்த இயலும். கடவுள் என்று தனியாக ஏதுமி்ல்லை என தவத்திலும் மனோபலத்திலும் மிகவும் உன்னதமான சக்தியடைந்த விவேகானந்தரே சொல்லியுள்ளார். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய அறிவைக் கடவுளின் அறிவுபோல் விசாலப்படுத்திக் கொள்தல் இயலும் என மஹாகவி பாரதியார் தான் எழுதிய பகவத்கீதை உரையில் குறிப்பிடுகிறார்.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கு நடந்த யுத்தத்தில் ஆங்கிலேயப் படைத்தளபதிகள் சமயசந்தர்ப்பத்துக்கேற்றபடி படைகளை நடத்தும் முறைபற்றித் தாங்களே உரிய முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்ததும், அதற்கு மாறாக ஜெர்மனிய தளபதிகள் ஒவவொரு முடிவுக்கும் தலைமையை எதிர்பார்த்துக் காத்திருந்ததும் ஆங்கிலேயர்கள் ஜெர்மனியரரை வெல்ல நேர்ந்ததற்கு முக்கியக் காரணங்களாகும். ஒவ்வொரு மனிதனும் சக்தி படைத்தவன். அச்சக்தியை ஆக்கரீதியில் பயன்படுத்தி முன்னேறுபவன் தான் வளர்ந்து பிறரது வளர்ச்சிக்கும் உதவவுகிறான். அழிவுரீதியாகப் பயன்படுத்துபவன் தானும் அழிந்து தன்னைச் சார்ந்தவர்களையும் அழிவுக்குள்ளாக்குகிறான்.
எல்லாம் இறைவன் செயல், நம்மாலாவது ஒன்றமில்லை எனும் போக்கு உயர்வுக்கு வழிகோலாது. தத்துவங்கள் வாழ்க்கை ஆகாது, வாழ்க்கையே தத்துவமாகலாம்
AKR
ஆம் நாடா ஐயா!
மிகவும் அபூர்வமான செய்திகளை சொன்னீர்கள்
இந்த ஜீவன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் முன்கூட்டியே திட்டம் போட்டு படைத்துள்ளார். அது அப்படியே நடக்கிறது.
சில உயிரினங்கள் சூழலுக்கு ஏற்ப தன்ன மாற்றிகொள்கின்றன, சில உயிரினங்கள் இடம் பெயருகின்றன அது இறைவனின் படைப்பு!
AKR ஐயா அவர்களே!
முயன்றால் எதுவும் முடியும் என்று முயற்சி செய்பவர்களுக்கு இறைவன் என்ற தத்துவம் சரி இல்லாமல் தோன்றலாம். அதற்காக முயற்சியை கைவிட வேண்டிய தேவை இல்லை. இறைவனை காணவும் அறியவும் ஒரு முயற்சி தேவை. இறைவனை அறிந்தால் மற்ற முயற்சி வீண் என்பதை அறிந்துகொள்ளலாம்.
விவேகனந்தர் கூற்றை சொன்னீர்கள், புத்தரும் கடவுள் கொள்கையை ஆதரிக்கவில்லை அதே நேரத்தில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று சொன்ன சங்கரர், ராமானுஜர், ஷிர்டி சாய்பாபா, முகமது நபி, ஏசு கிறிஸ்து போன்ற பல பெரியவர்களும் நாம் கூற முடியுமே. அவர்கள் அறியாததயா கூறினார்கள்.
ஒன்றை முழுமையாக அறியாதவரை அது இருக்கிறதா இல்லையா என்பதை நம்மால் திட்டமாக கூற முடியாது.
இயற்கை என்பது தானாக உருவானதைதான் குறிக்கிறது. ஆனால் எதுவுமே தானாக உருவாக வில்லை என்பதுதான் எனது கருத்து.
பெரிய பெரிய மிருகம், ரோபோட் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடிந்த மனிதனுக்கு தன் சுவாசத்தையோ அல்லது தனது உடம்பையோ கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம்.
நம் சுவாசம் நம்மை கேட்காமலே நடக்கிறது, நாம் சாப்பிடும் உணவு நம்மை கேட்காமலே செரிக்கிறது இவை எல்லாம் நமக்கு மேல் ஒரு சக்தி இருந்து நம்மை நடத்துகிறது என்பதை மிக தெளிவாக காட்டுகிறது.
மனிதனால் முடியாது என்பது இருக்கும் வரை இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்பதை நம்பித்தானே ஆகவேண்டும் என்பது எனது கருத்து ஐயா.
SUNDAR
உருவாயருவாய் உளதாயிலதாய் மருவாய் மலராய் மணியாயொளியாய் கருவாயுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாயருள்வாய் குகனே
என்ற அருணகிரிநாதரின் பாடல் என்ன சொல்கிறது.
இறைவன் இல்லாத இடமொன்றில்லாமலிருக்கையில் இறைவன் நம்முள்ளே இருந்தென்றும் உறைகையில் நாம் ஒவ்வொருவரும் தெய்வமல்லவா?
தெய்வத்தானாகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்
என்று வள்ளுவர் ஏன் சொன்னார்.
தெய்வம் உண்டு உண்டு என்று என்றும் சொல்லிக்கொண்டு தன் கடமையைச் செய்யாமல் பாப காரியங்களைச் செய்பவரை விட தெய்வம் இல்லையென்று ஊரெங்கும் பறையரிவித்தாலும் தன்னாலியன்ற உதவியைப் பிறர்க்கென்றும் செய்பவன் தானே தெய்வமாக விளங்குகிறான்.
AKR
அன்பரே இயற்கையாய் உருவானது என்று இங்கு ஒன்றுமே இல்லை!
ஒரு கம்பூட்டரோ அல்லது ஒரு கல்குலேடரோ எப்படி தானாக உருவாக முடியாதோ அதுபோல் அதைவிட நுட்பமாக படைக்கப்பட்டுள்ள மனிதனும் உலகமும் தானாக உருவாயிரிக்க வாய்ப்பில்லை என்றுதான் கருதுகிறேன்.
அனுமானங்கள் என்றும் உண்மை ஆகிவிடாது! ஆழ்ந்து சிந்தித்தால்தான் உண்மை புரியும்! இயற்கை என்று ஒன்றும் இல்லை இறைவன்தான் அங்கு இருக்கிறார்! அவரை கடும் முயற்சியோடு தேடினால் கண்டடைய முடியும்.
நாம் அறியாத ஒன்றை அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்வது சரியாகாது!
"இறைவன் என்று ஒருவர் உண்டு என்பவருக்கு" அவர் உண்டு, "அப்படி யாரும் இல்லை" என்று சொல்பவருக்கு அவர் இல்லை. அவ்வளவுதான்
மனிதனுள்ளும் இறைவனை காணமுடியும் ஆனால் அவர் நிரந்தரமாக யாருடனும் இருப்பதில்லை
நான் அவரை கடும் முயற்சியுடன் தேடி கண்டுகொண்டிருக்கிறேன் விரும்பினால் படித்து பார்க்கவும் www.karththar.blogspot.com
நன்றி சுந்தர்
பசித்த வயிற்றில் உணவு தெய்வம் பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம் கொட்டும் மழையில் கூறை தெய்வம் கோடை வெயிலின் நிழலே தெய்வம்
உடைத்த கல்லில் ஒன்று தெய்வம் ஒன்று கோவில் ஒன்று வாசல் இறைவன் படைப்பில் பேதம் இல்லை இடத்தைப் பொறுத்து எதுவும் மாறும்
AKR
இறையை இல்லயென்று சொல்லுபவர்களைக் கண்டால் எனக்கு சிரிப்பு வரும் அதே போல் ஆன்மீகத்தை சரியாகப் புறிந்து கொள்ளாமல் இறையைக் காட்டு நம்புகிறேன் என்ரு வாதிடுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லுவேன் மின்சாரம் தொட்டால் அதிர்ச்சி கொடுக்கிறது ,ஆகவே இருக்கிறது அதை க் காட்ட முடியுமா என்று
கடவுள் என்றாலே கட +உள் ஆக்வே நாம் நம்முடைய உள்ளுக்குள்ளே ப்ரயாணம் செய்து உணரவேண்டிய கடவுளை யாராலும் காட முடியாது அப்படியே காட்டினாலும் நம்மால் ந்மக்கு இருக்கும் சக்தி கொண்டு அதன் சக்தியை தாங்கிக் கொண்டு பார்க்க முடியாது
அணுவை சத கூறிட்ட அணுவிலும் உளன் என்று ஆன்றோர் கூறுவர்
அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்றும் கூறுவர் ஆமாம் அந்த இறையன்றி வேறு யாராலும் இதைப்போன்ற உலகத்தைப் படைக்க முடியுமா....?
இயற்கைதான் கடவுள் பஞ்ஜ பூதங்கள் சேர்ந்த ஒரு மா பெரும் சக்திதான் கடவுள் அவனிலிருந்து தெரித்த ஒரு மணித்துளிதான் உலகம்''
அன்புடன் தமிழ்த்தேனீ
ஆம் ஐயா
தன் சுவாசத்தையும், தனது உடம்பின் இரத்த ஓட்டத்தையும் தன்னாலேயே கட்டுப்படுத்த முடியாத மனிதன், தன்னையே இறைவன் என்று நினைப்பதும், தனக்கு மேல் இறைவன் ஒருவன் இருக்கிறான், தன்னை கண்ட்ரோல் பண்ணி நடத்துகிறான் என்று நம்ப மறுப்பதும் ஆச்சர்யமாகவே இருக்கிறது!
SUNDAR
தன் சுவாசத்தையும் தன் உடம்பின் ரத்த ஓட்டத்தையும் ஒவ்வொரு மனிதனும் யோக சக்தியால் கட்டுப்படுத்த இயலும். அவ்வாறு கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ளும் மனிதன் அபரிமிதமான சக்தி பெறுகிறான். இத்தகைய சக்தி படைத்தவர்களே முனிவர்களும் ரிஷிகளும். ஒவ்வொரு மனிதனும் தன்னைக் கடவுள் நிலைக்கு உயர்த்திக்கொள்ள முடியும். யோகமாவது செயல்களிலே திறமையாவது. தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் திறம்படச்செய்து ஆக்கபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படும் மனிதன் ஆத்ம ஞானம் பெறுகிறான். என்னால் ஒன்றும் இயலாது, எல்லாம் தெய்வத்தின் செயல் என்று எண்ணி முயற்சிகளைக் கைவிடுபவன் அஞ்ஞானத்தில் கிடந்து உழல்கிறான்.
AKR
அன்புள்ள ஐயா அவர்களே!
நாம் பிறரை பற்றி பேசுவதையும் பிறரை சாட்சியாக கூறுவதையும் விட நம்முடைய அனுபவம் பற்றியும் நம் எண்ணங்கள் பற்றியும் பேசுவது நல்லது என்று நினைக்கிறேன்.
முனிவர்கள் இருந்தார்கள் என்பது உண்மையாக இருக்கலாம் ஆனால் அவர்கள் இறைவனை நம்பினார்களா, நம்பவில்லையா என்பதோ, அவர்கள் சுவாசத்தை அடக்கி மரணத்தை ஜெயித்தர்களா (சுவாசத்தை கட்டுப்படுத்தினால் நிச்சயம் மரணத்தை ஜெயிக்க முடியும்) என்பது எல்லாம் நமக்கு முழுமையாக தெரியாது. மேலும் அப்படி மரணத்தை ஜெயித்த ஒருவரும் இருப்பதுபோல் தெரியவில்லை
நான் என்ற அகந்தையே இறைவனை அறிய தடை செய்யும் மிகப்பெரிய சுவர். நாம் ஒன்றுமில்லை என்ற நிலையே இறைவனை அறிய உதவும் முதல் படி.
இறைவன் கையில் எல்லாம் என்று சொல்லி முயர்சி செய்யாமல் இருக்க கூடாது உண்மைதான் ஆனாலும்
நான் உங்களுக்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்
ஒரு புதிய நோய் வரும் போது அதற்கும் பல காலங்கள் கடுமையாக முயற்சி செய்து மனிதன் ஒரு நல்ல மருந்தை கண்டுபிடிக்கிறான். அது மனித முயற்சி இல்லை என்று சொல்லவில்லை
ஆனால் அவன் எய்ட்ஸ்க்கு மருந்து கண்டு பிடித்தல் வோயிட்ஸ் என்றொரு புதிய நோய் வரும் பிறகு அதற்கு மருந்து கண்டுபிடிக்க காலம் காலமாக முயற்சி செய்யவேண்டும். செய்துதான் பாருங்களேன்.
இன்று வரை மறுத்து கண்டுபிட்க்க முடியாத நோய்கள் இருந்து கொண்டே இருக்கிறது என்பதே இறைவனின் வல்லமையை உங்களுக்கு விளங்க பண்ணும்.
நீங்கள் ஆடலாம் ஓடலாம் முயலலாம் ஆனால் அவரை மிஞ்சி யாருமே ஒன்றும் செய்துவிட முடியாது அன்பரே!
எய்தவனை அறியாமல் அம்பை ஒடித்து போடுவதில் ஒரு பலனும் இல்லை!
SUNDAR
1 comment:
படைத்தவன் இல்லாமல் படைப்பு இல்லை என்பது பற்றி நினைத்தாலே உண்மை புரியும்.உலகத்தில் காணும் எந்த ஒரு பொருளும் யாரோ ஒருவர் உருவாக்கியது ,உண்டாக்கியது ,படைத்தது தான். The Great scientist ஆன சர் ஐசக் நியூட்டன் தன் உதவியாளர் ஒரு நாத்திகர் கடவுளே இல்லை என்று கூறுபவர்.இயற்கை தானாக உருவானதே அதை யாரும் படைக்கவில்லை என்று வாதித்தார். ஒரு சமயம் ஐசக் நியூட்டன் அவர்கள் தங்கள் அலுவலக விடுமுறை நாட்களில் ஒருநாள் அலுவலகம் சென்று தன் உதவியாளர் உண்மை அறிய வேண்டும் என்று தன் மேஜையின் மேல் இருந்த காகிதங்களை கொண்டு அழகாக சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களை செய்து வைத்து சென்றார். விடுமுறை முடித்து உதவியாளர் அலுவலகம் வந்து பார்த்தால் மேஜை மீது காகிதத்தில் செய்யப்பட்ட கோள்களை பார்த்து சார் நான் வீட்டுக்கு செல்லும் போது எல்லா காகிதங்களும் ஓரிடத்தில் எடுத்து வைத்து சென்றேன். ஆனால் இதை யார் செய்தார்கள் என்று கேட்டார். அதற்கு நியூட்டன் எனக்கு தெரியாது. ஒருவேளை காகிதங்கள் தானாக அப்படி உருவாகியிருக்கும் என்றார் . அதற்கு உதவியாளர் அது எப்படி சாத்தியம் ஆகும். யாரோ ஒருவர் செய்திருக்க வேண்டும் என்றார். அதற்கு நியூட்டன் சிரித்துக் கொண்டே இந்த காகித கோள்களை ஒருவர் படைத்தார் என்று சொல்லுகிற நீங்கள் இந்த உலகத்தை ,இயற்கை ,மனிதன் எவ்வாறு தானாக உருவாகியிருக்கும். யாரோ படைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.அப்பொழுது உதவியாளர் கடவுள் இருக்கிறார். ஆனால் கண்ணுக்கு தெரியாதவர் என்று அறிந்து கொண்டார். கண்ணுக்கு தெரியாத கடவுள் சிலையாக எப்படி வந்திருக்க முடியும். மண்ணை எடுத்து வடிவம் கொடுத்து உருவாக்குவது மனிதன். கடவுள் எல்லாவற்றையும் படைத்திருக்க மனிதன் எப்படி கடவுளை படைக்க முடியும். மனிதன் செய்வது கடவுள் ஆகுமா? சற்று சிந்தியுங்கள்.
Post a Comment