Wednesday, May 21, 2008

இறுதி முடிவு இறைவனின் கையில்!

அன்பர்களே

"இறைவன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ண வேண்டும்" என்று கட்டளை இட்டிருப்பதால் என் திருமணத்துக்கு முன் "யார் நமது அப்பா அம்மாவை கை விட்டாலும் எந்த சூழ்நிலையிலும் நாம் கைவிடக்கூடாது" என்று மனதில் உறுதியான தீர்மானம் எடுத்திருந்தேன்.

அதற்காகவும், ஒரு கீழ்படிதல் உள்ள மனைவி வேண்டும் என்பதற்க்க்காகவும் பட்டம் படித்த கொஞ்சம் வசதி உள்ள நான் 4ம் வகுப்பு படித்த கிராமத்தில் உள்ள ஏழை குடும்னத்தில் பெண் கொண்டேன்.

எனது அம்மாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனினும் எனக்காக விட்டுவிட்டார்கள். திருமணம் ஆன புதிதில் என் அம்மாவுக்கு என் மனைவியை மிகவும் பிடித்து விட்டது. அவ்வளவு அன்யோன்யமாக இருந்தனர். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றாக தேடி நல்ல பெண்ணை கண்டுகொண்டேன் என்று!

ஆனால் அந்த மகிழ்ச்சி நிறைய நாள் நீடிக்க வில்லை!

ஒரு முறை என்னை பார்க்க வந்த என் மும்பை நண்பன், பேசிக்கொண்டு இருக்கும் போது சில சோகமான காரியங்களை சொல்லி அழஆரம்பித்து விட்டார். என் மனைவிக்கும் அவரை சில நாள் தெரியும் ஆகையால் அவரிடம் சென்று ஏன் அண்ணே இதற்க்கெல்லாம் அழுகிறீர்கள் எனது ஆதரவாக அவர் கையை பற்றினாள்.

அவ்வளவு தான் என் அம்மாவுக்கு வந்ததே கோபம்

அவன் கையை பிடித்து ஆறுதல் சொல்ல நீ யார்? எப்படி நீ பிற ஆணின் கையை
பிடிக்கலாம்? என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு தன் மகனின் மனைவி பிற ஆணை தொடக்கூடாது என்ற பாசம் (மேலும் அவர்கள் வளந்தது அப்படி)

என் மனிவிக்கு அதற்குமேல் கோபம் "வேறு எந்த விஷயத்தில் என்னை குற்றம் கண்டு பிடித்தாலும் நான் வருத்தப்பட மாட்டேன் ஆனால் எனக்கு கொஞ்சமும் பிடிக்காத இந்த விஷயத்தில் என்னை குற்றம் கண்டுபிடித்து விட்டார்களே உங்கள் அம்மா, இனி அவர்களுடன் பேச என்ன இருக்கிறது" என்று இருவரும் எதிரிகள் போல மாறிவிட்டனர்.

15 வருடமாகியும் இன்று வரை என்னால் அவர்களை முழு சமாதானம் படுத்த முடியவில்லை.

இதில் இருந்த நான் என்ன தெரிந்துகொண்டேன் என்றால் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது, நம் கையில் ஒன்றுமே இல்லை என்பதுதான்.

நாம் இப்படி அப்படி என்று பல கனவு காணலாம். ஆனால் யார் யார் யாருடன் இருக்க வேண்டும் எவ்வளவு நாள் இருக்க வேண்டும் என்று எல்லாமே இறைவனால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது நம் கையில் ஒன்றும் இல்லை. அதற்காக நாம் நல்லதை நினைக்கக்கூடாது என்று அருத்தம் அல்ல, நாம் என்ன நினைத்தாலும் இறுதி முடிவு எடுப்பவர் இறைவன் என்பதே

நல்ல நாற்றை வாங்கிதான் நடுகிறோம், நல்ல உரம்தான் போடுகிறோம், நன்றாக தண்ணீர் பாச்சுகிறோம் ஆனால் கதிர் ஒருமுழ நீளம் வருமா அல்லது ஒரு ஜான் நீளம் வருமா என்ற இறுதி முடிவு இறைவனின் கையில்!

No comments: