சரியான காரணம் கண்டுபிடிக்க முடியாத சில நிகழ்வுகளுக்கு அது "அவன் தலை விதி" என்று சொல்லி மனிதர்கள் முடித்துவிடுவர். இந்து மதத்தில் "ஊள்வினையின் பலன்" என்று இதற்க்கு பெயரிடப்பட்டு பரவலாக எல்லோராலும் நம்பப்படுகிறது. கிறிஸ்த்தவத்தில் விதியை பற்றி வெளிப்படையாக எதுவும் சொல்லப்பட வில்லை என்றாலும் "நாள் பார்க்காமலும், குறி கேளாமலும் இருப்பாயாக" என்று சொல்வதன் மூலம், நாளை என்ன நடக்கும் என்பதை அறிய முயலாதே அது இறைவனின் கையில் உள்ளது என்று முடித்துவிட்டது. "இஸ்லாத்தில் விதியை பற்றி சர்ச்சை எழுப்பக்கூடாது" என்று சொல்லி அதற்கு எந்த விளக்கமும் இல்லாமலே விடப்பட்டுள்ளது.
.
உண்மையில் விதி என்று ஒன்று உண்டா?
ஒருமுறை நான் எனது நண்பர் ஒருவரிடம் இறைவனை பற்றி விளக்கி சொல்லி நேர்மையான வழியில் வாழ முயற்சிக்க வேண்டும் என்று சொன்னேன். உடனே அவர் என்னிடம் நான் உங்களை ஒரு கேள்வி கேட்பேன் அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் என்றார். என்ன என்றேன் "நாம் இருவரும் இன்று இந்த இடத்தில் நிற்று இறைவன் பற்றி பேசுவோம் என்பது இறைவனுக்கு முன்கூட்டியே தெரியுமா தெரியாதா?" என்றார்.
நானும் சிறிது யோசித்து தெரியாது என்றேன்
.
உடனே அவர் " என்ன சார் கடவுளை இவ்வளவு குறைவாக எடை போட்டுவிட்டீர்கள், நாளை என்ன நடக்கும் என்று தெரியாதவரா ஒரு வல்லமை உள்ள கடவுள். கடவுள் மிக மிக பெரியவர் நீங்கள் அவரை சரியாக அறியவில்லை"என்று சொல்லிவிட்டார்.
.
.
உடனே நான் சரி ஐயா அவர் பெரியவர் தான் நாம் இங்கு நின்று அவரை பற்றி பேசுவோம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியும் என்று வைத்துக்கொள்ளுங்கள் அதற்கும் நேர்மையாக நடப்பதற்கும் என்ன சம்பத்தம் என்றேன்.
.
உடனே அவர்.
நாளை என்ன எங்கு எப்படி நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்த கடவுளுக்கு நான் எங்கு பிறப்பேன் எப்படி வாழ்வேன் எங்கு என் வாழ்க்கை முடியும் என்பது எல்லாமே முன்கூட்டியே தெரியும். நான் இப்படித்தான் இருப்பேன் என்று அவர் படைத்து விட்டார் எனவே நான் இப்படித்தான் இருப்பேன். உங்களை இப்படித்தான் நேர்மையாக வாழ்ந்து கஷ்டப்பட வேண்டும் என்று படைத்துள்ளார் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்" கடவுள் படித்ததை யார் மற்ற முடியும் என்று சிம்பிளாக முடித்து விட்டார்
.
நாளை என்ன எங்கு எப்படி நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்த கடவுளுக்கு நான் எங்கு பிறப்பேன் எப்படி வாழ்வேன் எங்கு என் வாழ்க்கை முடியும் என்பது எல்லாமே முன்கூட்டியே தெரியும். நான் இப்படித்தான் இருப்பேன் என்று அவர் படைத்து விட்டார் எனவே நான் இப்படித்தான் இருப்பேன். உங்களை இப்படித்தான் நேர்மையாக வாழ்ந்து கஷ்டப்பட வேண்டும் என்று படைத்துள்ளார் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்" கடவுள் படித்ததை யார் மற்ற முடியும் என்று சிம்பிளாக முடித்து விட்டார்
.
எனக்கு இரண்டு நாளாக ஒரே மன குழப்பம் கடவுள் எல்லவற்ற்யுமே முன்கூட்டி தீர்மானித்து படைத்து விட்டால் பிறகு "நீ இப்படி வாழ், நன்மை செய், நியாயம் செய் என்று நம்மை பார்த்து ஏன் கூற வேண்டும்? என்று ஒருபுறம் இன்னொரு புறம் "கடவுளுக்கு தெரியாத ஒரு எதிர்காலம் இருக்க முடியாதே" என்று மறுபுறமும் மிகவும் குழம்பிவிட்டேன்.
.
கடைசியில் எனது வழக்கப்படி ஒருநாள் இரவு தனிமையில் சென்று இறைவனிடம் கேட்க ஆரம்பித்தேன் "விதி என்று ஒன்று உள்ளதா? அவர் கேட்ட கேள்விக்கு சரியான பதில் என்ன என்று விளக்க வேண்டும் என்று மணிக்கணக்கில் மன்ற்றடினேன்.
.
.
இறைவனின் ஆச்சர்யமான பதில் இதோ!
.
ஒவ்வொரு மனிதன் படைக்கப்படும் போதும் அவன் முன் ஜென்மத்தில் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப "இங்கு இந்த தாய் வயிற்றில் பிறந்து இப்படி போய் இவ்வாறு மரணமடைவான்" என்ற விதி என்னும் ஒரு தலை எழுத்து எழுதப்பட்டு தான் பிறக்கிறான்.
.
.
அவன் உண்மை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டி இறைவனை தேடாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றும் உலக வாழ்க்கை வசதிகளுக்காக மட்டுமே இறைவனை தேடியும் வாழ்வான் என்றால் அந்த விதியின் கோட்டிலேயேசரியாக சென்று அதை போலவே மரணமடைவான்.
.
.
ஆனால் அதே விதிக்கொட்டில் போய் கொண்டிருக்கும் ஒருவன் "உலகில் நடக்கும் காரியங்களை பார்த்து, பலவிதமான வார்த்தைகளை கேட்டு பல்வேறு கேள்விகளால் குழம்பி பாதிக்கப்பட்டு ஒரு இடத்தில் நின்று "கடவுளே இங்கு என்ன நடக்கிறது, நான் எதற்க்காக இந்த பூமியில் படைக்கப்பட்டேன் உண்மையை விளக்க மாட்டீரா" என்று கதறினால் அவனுக்கு என் வழியை தெரியப்படுத்துவதொடு மட்டுமல்லாமல் அவனுக்கு எழுதப்படுள்ள விதியையே கூட மாற்றும் வல்லமை எனக்கு உண்டு" என்றார்
.
.
மறுநாள் என் நண்பரிடம் சென்று "உங்களுக்கு எழுதப்பட்ட விதி சரிதான். அந்த விதியின் பாதையில் கொடூரமான முடிவை நோக்கி போகும் உங்களை திருப்பத்தான் இறைவன் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் இந்த நிலையில் நீங்கள் இறைவனை நோக்கி கெஞ்சினால் உங்கள் விதியை மாற்றி அமைக்க அவருக்கு வல்லமை உள்ளது என்று நினைக்கிறீர்களா இல்லையா என்று கேட்டேன்.
.
உடனே அவர் எழுதிய விதியை எல்லாம் யாராலும் மற்ற முடியாது என்றார்.
.
.
"ஏன் நண்பரே கடவுளை இவ்வளவு குறைவாக மதிப்பிட்டுள்ளீர் அவர் மிக மிக பெரியவர் அவரால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை" என்று அவர் சொன்ன பதிலையே திரும்ப சொன்னேன்.
.
உடனே அவர் அது சரி அவரால் எல்லாம் முடியும் விதியை கூட மாற்ற முடியும் என்றார்
.
"அவரால் விதியை மாற்ற முடியும் என்றால் உங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் எதையும் அவரால் மாற்றி அமைக்க முடியும் அகவே இறைவனை தேடி நேர்மை வழியில் நடவுங்கள்' என்று சொன்னேன் அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
குறிப்பு:
நான் எழுதிய இந்த செய்தியை பார்த்து எல்லோரும் அவரவர் ஊள்வினையின் படி திரும்ப திரும்ப பூமியில் பிறந்துகொண்டு இருப்பார்கள் என்று எண்ணிவிட வேண்டாம். இயேசு என்னும் ஒருவர் இந்த பூமியில் அவதாரம் எடுத்து பாவத்துக்காக மரிக்கும்வரை அதுபோல் இருந்த சுழர்ச்சி முறை பல்வேறு பயங்கரமான நிகழ்வுகளினால் அவர் மரணத்துக்கு பின் மாறி இன்று சொர்க்கம் நரகம் என்ற முடிவின் நிலைக்கு வந்துவிட்டது. கொடூரமான முடிவு இருப்பதால் தான் ஒருவான் தன் உடம்பையே முழுவதுமாக கிழிக்க கொடுத்து ஒரு மீட்பை வாங்கி கொடுத்தார்.
.
இப்பொழுது உள்ளபடி "பூமியில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் இயேசுவை அறிந்து கொள்ள பல சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படும். அவரை ஏற்றுக்கொண்டவர் இதற்க்கு முன் எத்தனை பிறவியில் என்ன பாவங்கள் செய்திருந்தாலும் மன்னிக்கப்படும். ஏற்று பாவ மன்னிப்பை பெறாதவர் இந்த பிறவியில் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் முன் பிறவியில் செய்த பாவங்கள் அவரோடு இருப்பதால். இறைவன் முன் நியாய தீர்ப்புக்கு நிற்க வேண்டும் முடிவை நான் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அது மிக கொடூரம் நினைத்தாலே என் கண்களின் கண்ணீர் வருகிறது.
.
ஒரு பொய் சொன்ன தர்மன் நரகத்தை போய் பார்க்க வேண்டி வந்தது என்று இந்து புராணமே சொல்கிறது. ஒரு தீமையான செயல் கூட நம்மை இறை ராஜ்யத்துக்கு தகுதி இல்லாதவனாக மாற்றி விடும்.
ஒரு பொய் சொன்ன தர்மன் நரகத்தை போய் பார்க்க வேண்டி வந்தது என்று இந்து புராணமே சொல்கிறது. ஒரு தீமையான செயல் கூட நம்மை இறை ராஜ்யத்துக்கு தகுதி இல்லாதவனாக மாற்றி விடும்.
No comments:
Post a Comment