Thursday, April 24, 2008

மதங்கள் உருவான வரலாறு

அன்பானவர்களே இந்த நாட்களில் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு மதம் என்னும் வார்த்தை மனிதனை "மதம் பிடித்தவனாக" ஆக்கி அனேக தீய செயலுக்கு வழிகாட்டியாய் அமைகிறது. இன்று உலகில் பல்வேறு பெரிய சிறிய மதங்கள் இருக்கின்றன.
.
ஆனால் எந்த ஒரு மதத்தை எடுத்துகொண்டாலும் அதன் சாராம்சமாக நல்ல சிந்தனை, நல்ல நோக்கம். நல்ல செயல்கள், பிறருக்கு தீங்கிழைக்காமை, திருடாமை, பொய் சொல்லாமை, நீதி நேர்மை போன்ற உயர்ந்த தத்துவங்களை தான் அடிப்படையாக கொண்டுள்ளது. இவை எல்லாமே ஒரே இறைவனை தான் சுட்டி காடுகின்றன என்றாலும் இப்படி பல்வேறு பிரிவுகளாக பிரிய காரணம் என்ன என்பதை சற்று ஆராய்வோம்.
.
ஆதியில் இறைவன் தன்னை எப்படி வேண்டுமாலும் வழி படலாம் என்றும் எந்த விதத்தில் வழி பட்டாலும் அது தன்னையே வந்து அடையும் என்றும் தனது அடியார்களுக்கு விளக்கி இருந்தார்
.
எனவே மனிதர்கள் இறைவனை கும்பிடும் போது ஒரு ஒருமனப்பாடு வர வேண்டும் என்பதற்காக உருவங்களையும் சிலைகளையும் வைத்து வழிபட ஆரம்பித்தனர். நாளடைவில் மனிதன் இறைவனின் வார்த்தைகளுக்கும் அவர் காடிய வழிகளில் வாழ்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல். சிலைகளுக்கு செய்யும் பூஜைகளிலும், சிலைகள் இருக்கும் இடத்தின் மேல் ஒரு வைக்ராக்கியமும் உள்ளவனாக மாறி அதை பிறன் தொடக்கூடாது, கீழ் ஜாதி சிலை இருக்கும் இடத்தினுள் வரக்கூடாது என்றெல்லாம் பல்வேறு சட்ட திட்டங்களை தானே வகுத்துக்க்கொண்டான் அகவே உண்மையான இறைவனின் வழியாகிய நன்மை, நீதி, நேர்மை, அங்கு மறைந்து போனது
.
எனவே இறைவன் பல்வேறு இறை மனிதர்களை அனுப்பி தனது உயரிய நோக்கம் என்ன என்பதை போதிக்கலானார் புத்தர், மகா வீரர், குருநானக், போன்றவர்களின் போதனைகளை படித்து பார்த்தல் அது புரியும் அவை போதிப்பதெல்லாம் ஒரு உன்னதமான நல்ல வாழ்க்கை முறையே. ஆனால் மனிதன் அவர்கள் சொல்லிய நல்ல காரியங்களை செய்வதை விட்டு விட்டு அவர்களுக்கே சிலை வைத்து புது புது மதங்களை உருவக்கிகொண்டான்.
.
பாவம் செய்பவன் முடிவு நரகம் என்று நித்ய வேதனையான இடம் என்பதை தெளிவாக அறிந்த இறைவன் மூசா என்ற மோசேயிடம் 10 கட்டளைகள் மன்றும் அவரின் நீதி நியாயங்கள் போன்றவற்றை தெரியப்படுத்தினார். அதன் படி கொடிய பாவம் செய்தவன் கொலை செய்யபட வேண்டும் என்றும் சாதாரண பாவம் செய்தவன் பலியிட்டு பாவத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கட்டளை இட்டார். அது தான் "தோரா" என்னும் வேதமும் "ஜூடாயிசம்" போன்றவை. (கிறிஸ்த்தவத்தில் பழைய ஏற்பாடு). நமது பாவத்துக்காக இன்னொரு ஜீவன் துடிதுடித்து சாகிரத்தை பார்த்தாவது இனி பாவம் செய்ய மாட்டான் என்று இறைவன் நினைத்தார்.
.
ஆனால் மனிதன் இரக்கமற்றவனாகி பாவம் செய்து செய்து பலியிட்டு அதை புசிப்பதிலும், பாவம் செய்த மற்றவனை கொடுமையாக தண்டிப்பதிலுமே தனது தலையாய கடமை போல நடந்து கொண்டான்.
.
அதனால் வேதனையுற்ற இறைவன் இயேசுவை அனுப்பி "பலியை அல்ல இரக்கத்தையே விருபுகிறேன்" என்றும் "தன்னில் பாவம் இல்லாதவன் அடுத்தவனை முதலில் தண்டிக்கட்டும்" என்றும் நீ உன் சகோதரனுடைய குற்றங்களை மன்னிக்க விட்டால் உன் பாவங்கள் மன்னிக்க படாது என்றும்" போதிக்க வைத்தார்
.
ஆனால் மனிதன் அவருக்கும் சிலை வைத்து அவர் அம்மாவுக்கும் சிலை வைத்து வணங்குவதோடு அவர் போதித்த வார்த்தைகளாகிய "உன்னிடத்தில் கேட்பவன் எவருக்கும் கொடு" "ஒரு கன்னத்தில் அடித்தல் மறுகன்னத்தை திருப்பி கொடு" "பூமியில் உனக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம்" போன்ற அருமையான கருத்துக்களை எல்லாம் விட்டு விட்டு தனக்குள்ளே பல பிரிவினையோடு ஏதேதோ செய்துகொண்டு இருக்கிறான்.
.
இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன?
.
அன்றிலிருந்து இன்று வரை எதக்குமே முழுமையாக கீழ்படிய விரும்பாத மனித வர்க்கம்தான். கீழ்படிந்தவர்கள் எல்லாம் மென்மையான வாழ்க்கை வாழ்ந்து இறைவனடி சேர்ந்து விட்டனர். பல பிறப்பு, சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டும் கீழ்படியாத கூட்டங்கள் கடைசி நியாய தீர்ப்பை எதிர்நோக்கி நிற்கின்றன
.
பொய் சொல்வது பாவம் என்று எல்லா மதமும் சொல்கிறது ஆனால் எத்தனைபேர் துணிந்து பொய் சொல்கிறோம் சொல்லிவிட்டு, வியாபாரத்தில் பொய் சொல்லலாம், விற்பனை அதிகாரி பொய் சொல்லியே ஆக வேண்டும், இந்த காலத்தில் பொய் சொல்லாமல் இருக்க முடியாது என்றெல்லாம் தத்துவம் பேசுகிறோம்.
.
அதுபோல் திருடுவது, லஞ்சம் வாங்குவது, பிறனை ஏமாற்றுவது எல்லாம் பாவம் என்று எல்லா மனசாட்சிக்கும் நன்றாக தெரியம் ஆனாலும் அந்த லஞ்சத்தை வெகுமானமாக வாங்கலாமா, பொருளாக வாங்கலாமா அதை எப்படியாவது ஒரு வழியில் வங்கவேண்டுமே என்று துடிக்கிறோம்
.
இறைவனை பற்றி சொல்வதைவிட ஒரு நடிகையை பற்றியோ அல்லது பணம் சம்பாதிப்பது பற்றியோ, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பற்றியோ பேசினால் கேட்க அநேகர் ஆர்வமுடன் உள்ளனர்.
.
இப்படி மனிதனின் இருதயமானது மகா கேடுள்ளதாகவும் இருப்பதால் அவனை நரகம் போவதில் இருந்து தடுப்பதர்க்காகதான் இறைவன் சட்ட திட்டங்களை மாறுகிறார் ஆனால் மனிதன் அப்படியே தான் இருக்கிறான் ஆனால் அந்த மாற்றங்கள் எல்லாம் ஒவ்வொரு மதமாக உலகில் உள்ளன.
நிறைவாக சொல்கிறேன்
.
ஒரே ஒரு வழி தான் உண்டு!
அது இறைவன் ஒருவருக்கே தெரியம்!
.
அதை இறைவனிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்களுக்குள் இறைவன் வைத்திருக்கும் மனசாட்சிக்கும் உங்கள் மனதுக்கு தெரிந்த நீதி நியயங்களுக்கும் முழுமையாக கட்டுபட்டு நடவுங்கள் அப்பொழுது இறைவன் அந்த வழியை தெரிவிப்பார்.
.
அல்லது "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிரவர்களே என்னிடம் வாருங்கள்" என்று சொன்ன இயேசுவிடம் வாருங்கள் அவர் அந்த வழியை கண்டடைய உங்களுக்கு உதவுவார்.
"கேட்டுக்கு போகும் வாசல் விசாலமானது அதில் அநேகர் செல்கின்றனர், ஆனால் ஜீவனுக்கு போகும் வழி மிக குறுகியது அதை கண்டு பிடிப்பவர் சிலரே"
.
இந்திய வருமானவரி சட்டம் 1961ம் வருடம் இயற்றப்பட்டது. அப்பொழுது வருமானவரியை முன்பணமாக கட்டுதல் (அட்வான்ஸ் டாக்ஸ்) , சேவை வரி (சர்வீஸ் டாக்ஸ்) போன்ற எதுவும் கிடையாது ஆனால் பல்வேறு கால கட்டங்களில் அவை எல்லாம் தேவைக்கு ஏற்ப புகுத்தப்பட்டன. இன்று வரி கட்டுபவர்கள் நடை முறையில் உள்ள விதிகளின் படித்தான் வரி கட்டவேண்டுமே தவற 1961ம் வருடம் உள்ளதுதான் அடிப்படையானது அதில் உள்ளது போல் தான் கட்டுவேன் என்று சொன்னால் தண்டனை தான் கிடைக்கும்.

அதொபோல் தான் இறைவனின் சட்டங்களும். அவர் காலத்துக்கு ஏற்றார் போல் பல விதிகளை மாற்றுகிறார் சில விதிகளை சேர்க்கிறார் காரணம் மனிதன் எப்படியாவது பரிசுத்தம் அடைய வேண்டும் என்பதுதான் நாம். அதை விட்டுவிட்டு ஆதியில் சொல்லப்பட்டது தான் உண்மையானது என்று போவோமாகில் அது தண்டனைக்கு எதுவாக அமையும் என்பதில் ஐயமில்லை!

No comments: