அன்பர்களே! இன்று அநேகர் மனிதில் எழுந்துள்ள மிக பெரிய கேள்வி என்னவென்றால் "நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை, இறைவன் ஏன் எனக்கு இவ்வளவு பெரிய துன்பங்களையும் பிரச்சனைகளையும் கொடுக்கிறார்?" என்பது தான்.
.
.
உலகில் உள்ள அனேக மக்கள் பல்வேறு பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு அல்லது தானாகவே அதில் போய் விழுந்துவிட்டு பிறகு வெளியில் வர முடியாமல் தவிக்கிறார்கள், புலம்புகிறார்கள், அழுகிறார்கள்.
.
.
பிரச்சனையே இல்லாத மனிதன் எவரும் இல்லை தான், ஆனால் சில நேரங்களில் கொடிய நோய், விபத்து, அன்பானவர்கள் மரணம், வேலை இல்லாமை, கடன் பிரச்சனை, எதிரிகள் தொல்லை போன்ற மிக பெரிய பிரச்சனை வந்து இனிமேல் எதிர்காலம் என்ற ஒன்று நமக்கு உள்ளதா? என்று சந்தேகிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நம்மை தாக்கி நிர்மூலமாக்கி விடுவதை வாழ்வில் பலர் உணர்ந்திருக்கலாம்.
.
.
இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன என்பதை யாரும் அமர்ந்து ஆராய்வது கிடையாது. ஒரு மிகப்பெரிய அடர்ந்த மரம் நம் கண்ணுக்கு நன்றாக தெரியும், ஆனால் அந்த மரத்தை தங்கி நிற்கும் அடிப்படையான வேர் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. மரத்தை எவ்வளவு தான் வெட்டினாலும் மீண்டும் மீண்டும் துளித்து விடும் ஆனால் வேரை கண்டு பிடித்து அகற்றினால் மீண்டும் அந்த மரம் வளராது. அதுபோல் நமக்கு ஒரு பிரச்சனை, துன்பம் என்றால் அந்த துன்பம் யாரால் வந்தது என்று நோக்குவது தவறு அதற்கு அடிப்படையான காரணம் நம்முடைய தவறாக தான் இருக்கும் அதை ஆராய்ந்து அகற்ற வேண்டும் .
.
.
அநேகர் தான் ஒரு பரிசுத்தவானாகவும் இறைவன் தவறுதலாக அந்த துன்பத்தை தனக்கு கொடுத்து விட்டதாகவும் நினைக்கின்றனர். சிலர் ஆண்டவன் என்னை ஏன் இப்படி சோதிக்கின்றான்? என்கின்றனர். சிலர் அதற்கும் ஒருபடி மேலே போய் தனக்கு நன்னை கொடுத்த ஆண்டவனுக்கே கண் இருக்கிறதா என்று கேட்கின்றனர்.
.
இறைவன் சார்பில் நான் சொல்லும் வார்த்தை என்னவென்றால் இறைவன் மகா நீதிபரர், அவர் சர்வ லோகத்துக்கும் நியாயாதிபதி, அவர் நியாயகேடு இல்லாத சுத்த தேவன் அவர் யாரையும் நியாயம் இல்லாமல் தண்டிப்பதும் இல்லை காரணம் இல்லாமல் யார் கையிலும் இருந்து எதையும் பிடுங்குவதும் இல்லை, யாரையும் தீமையால் சொதிப்பதிம் இல்லை,

நம் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணம் நாமே அன்றி வேறு யாரும் அல்ல என்பதை முதலில் உணர வேண்டும்.
.
.
ஏன் மகன் 6மாத குழந்தையாய் இருக்கும் போது ஒரு நாள் வீட்டில் மின்சாரம் போய் விட்டதால் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பக்கத்தில் அவனை குப்புற போட்டிருந்தோம். அந்த மெழுகு வர்த்தியின் வெளிச்சத்தை பார்த்தவுடன் அவனுக்கு ஒரே சந்தோசம். மெல்ல தாவி தாவி அந்த தீயை கையில் பிடிக்க முயன்றான். அது போல் தான் மனிதர்களும். தன் கண்ணுக்கு மனதுக்கு இன்பமாக தெரிவதை எல்லாம் அடைய, அனுபவிக்க கடுமையான முயற்சி செய்கின்றனர் கடைசியில் சூடு பட்டு துன்பத்தில் மாட்டி கொள்கின்றனர்.
.
தீ சுடும் என்றும், மின்சாரம் ஷாக் அடிக்கும் என்பதும் பல முறை அனுபவப்பட்ட நமக்கு தெரியும் ஆனால் அந்த குழந்தைக்கு தெரியாது. அதுபோல நித்யமாக இருக்கும் இறைவனுக்கு எது யாருக்கு தீமையானது, எது நன்மையானது என்றும், எதை யாருக்கு எப்பொழுது எங்கே கொடுக்க வேண்டும் என்பதும் எதை யாருக்கு கொடுத்தால் அது தீமையாக முடியும் என்ற சகலத்தையும் அறிந்தவர்

அவர் தரும் காலம் வரை பொருத்திராமல் இன்பத்தை அடைய வேண்டும் என்றும் எப்படியாவது பணத்தை சேர்த்துவிட வேண்டும் என்றும் ஓடுபவர்களுக்கு அவர்கள் எதிபார்க்கத துன்பம் தானாகவே வந்து சேரும். அதற்கு இறைவனை குறை கூறுவது கொஞ்சமும் நியாயமல்ல!
.
இறைவனை ஒரு நல்ல பாசமுள்ள தகப்பனாகவும் நாமெல்லாம் அவரின் அன்புக்குரிய பிள்ளைகளாகவும் நினைத்துக்கொள்ளுங்கள். எப்படியெனில் இந்த உலகில் நமது உடம்பை பெற்ற ஒரு தாய் தகப்பன் இருந்தாலும், தாயின் வயிற்றில் நமக்கு உயிர் கொடுத்த தகப்பன் இறைவனே.
.
ஒரு நல்ல தகப்பன் தன் தன் பிள்ளைகளை காரணம் இல்லாமல் கண்டிக்கவோ தண்டிக்கவோ மாட்டான் உலக தகப்பனே அப்படி இருக்கும் போது நமது பரம தகப்பன் அப்படி செய்வாரா? "உன்னை பெற்ற தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை, என் உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்கிறேன்" என்று சொல்லும் இறைவன் ஒரு போதும் நம்மை காரணம் இல்லாமல் கண்டிக்கவே மாட்டார். "

மேலும் ஒரு நல்ல தகப்பன் தன் பிள்ளையை எதற்காக கண்டிக்கிறான் என்று ஆராய்ந்தால் எனக்கு தெரிந்தவரை:
.
1. பிள்ளையின் கீழ்படியாமை
2. பிள்ளையின் பாவ செயல்கள்
3. பிள்ளையின் எதிர்காலம்
4. சகோதரருக்குள் ஒற்றுமை இன்மை
5. அடுத்தவர்களின் புகார்கள்
இவற்றில் எதாவது ஒரு காரணமாகத்தான் இருக்க முடியும்.
இவற்றை பற்றி சற்று விபரமாக ஆராய்வோம்....
No comments:
Post a Comment