Thursday, April 10, 2008

இறைவன் ஏன் உருவ வழிபாட்டுக்கு தடை விதித்தார்?

இறைவன் ஏன் உருவ வழிபாட்டுக்கு தடை விதித்தார்?

ஒருநாள் நான் எனது இந்து நண்பர் ஒருவரிடம் பைபிளில் இறைவன் "தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் (அதாவது கடவுள் ஒருவரே கடவுள்) அவரன்றி வேறு ஒரு தெய்வம் உனக்கு வேண்டாம்" என்றும் "ஒரு விக்ரகத்தையோ, சுரூபத்தயோ உண்டாக்கி நமஸ்கரிக்க வேண்டாம்" என்று இறைவன் கட்டளை இட்டுள்ளார் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.

அவர் உடனே " ஒரு உருவத்தை வைத்தோ, ஒரு பெயரை சொல்லியோ வழிபடுவதில் என்ன தவறு? நம் ஒருமனபாட்டுக்கு அது மிகவும் அவசியமாக இருக்கிறதே. ஒன்றுமில்லாத ஒன்றை பார்த்து பேசுவதை விட ஒரு உருவத்தை பார்த்து நமது குறையை சொல்வதிலோ அதை கும்பிடுவதிலோ என்ன தவறு இருக்க முடியும்" உங்கள் இறைவன் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.எதை பேசினாலும் நியாயத்தோடு பேசு என்று சொல்லிவிட்டான்.

ஏன் மனதில் பல குழப்பங்கள் ஆரம்பித்து விட்டது மகா நீதிபரரான இறைவன் நியாயம் இல்லாமல், ஒரு சிலையை வழி படுவதை மிக பெரிய பாவமாக அதுவும் முதல் கட்டளையாக ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி என்னை துளைத்தது தூக்கம் வரவில்லை.

எனது வழக்கப்படி இறைவனிடம் சென்று அமர்ந்தேன் "ஆண்டவரே இந்த கேள்விக்கு எனக்கு சரியான பதில் தரவேண்டும் நீர் மகா நீதிபரர் நீர் சொல்லும் எதுவும் நியாயம் அற்றதாக் இருக்காது" என்று சொல்லி மன்றாடினேன்.

அப்பொழுது இறைவன் கொடுத்த ஆச்சர்யமான பதில் இதோ!

"ஆதி காலத்தில் உருவம் வைத்து வழி பட்ட யாரையும் நான் தவறு என்று சொன்னதில்லை. உண்மையாய் இறைவனை தேடுபவர்கள் எந்த விதத்தில் வழிபட்டாலும், என்ன பெர்யர் சொல்லி அழைத்தாலும் அது என் சமூகத்துக்கு வந்து எட்டும்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மனிதன் தீய சக்திகள் உதவியால் மந்த்ரீக வித்தைகளை கற்று, இன்றைய உலகத்தில் ஒருவன் பெயரை சொன்னால் போதும் அவன் ஜாதகத்தையே கணித்து சொல்லும் அளவுக்கு வளர்ந்தது விட்டான்.அமாவாசை இரவு நடு ஜாமத்தில் இந்த பூமியின் சுழர்ச்சி முறையை அறிந்து என்னிடம் இருந்து மக்களை பிரிக்க போராடுகிறான்
இதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை

ஆனால் இந்த உலக மக்கள் வழிபடும் எல்லா படங்களும் எல்லா உருவங்களும் மாந்த்ரீக தலைமை இடமாகிய "மலையாளத்தில்" (கேரளாவில்) மந்திரத்தால் பூமிக்கு அடியில் கட்டி வைக்கப்பட்டுள்ளது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் ஒரு முறை அந்த இடங்களை எல்லாம் கூட என் கண்முன் காட்டினார்.

எனவே நீங்கள் அப்படி கட்டப்பட்ட ஒரு உருவத்தை வழிபடும் போதும் எந்த ஒரு ஆபத்து நேரத்தில் அதை நோக்கி கூப்பிட்டாலும் அது என்னை வந்து எட்டாது என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது. அத்தோடு கூட கடவுள் அல்லாத ஒன்றை வழிபட்ட பாவமாக கூட அது மாறிவிடும் மேலும் நீங்கள் புதியதாக ஒரு உருவத்தை வைத்து வழி பட்டாலும் அது மாந்த்ரீக உலகத்துக்கு உடனே தெரிந்துவிடும் அந்த படமும் அங்கு கொண்டுபோகப்படும்.
.

நான சொல்லும் இந்த காரியம் உனக்கு புரிவது கடினம். ஆகினும் இந்து புராணங்களில் கூட உருவம் உள்ள சாமிகளை மந்திரம் ஓதி ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கிரியை செய்ய முடியாமல் தடுத்த சம்பவங்களும் உள்ளன" எனவே தான் நீங்கள் எனக்கு பெயர் வைக்க வேண்டாம் உருவம் வைக்க வேண்டாம் என்று கட்டளை இட்டேன்" என்று சொன்னார்

எதுவும் சந்தேகம் இருந்தால் முன் வைக்கவும் இறைவனிடம் அமர்ந்து விசாரித்து பதில் எழுதப்படும்.

1 comment:

Unknown said...

நல்ல பதில் அளித்துள்ளீர்கள். ஆனாலும் இன்னும் விளக்கமாக இருந்தால் நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம்... என்னிடம் அநேகம் பேர் இக்கேள்வியை கேட்கிறார்கள்... இன்னும் அதிக விளக்கம் கொடுத்தால் நலமாக இருக்கும். வேதாகம குறிப்புகளோடு. நன்றி.