Monday, April 14, 2008

நன்மையை தரக்கூடிய பொய் சரியானதா?

நாம் காணும் இந்த உலகத்தில் பொய் என்பது மிகவும் சாதரணமாகி விட்டது. அது ஒரு பாவமாகவோ தவறான செயலாகவோ யாருக்கும் தேரிவதில்லை. பொய் சம்பந்தமான கீழ்க்கண்ட விதமான கோட்பாடுகள் பரவலாக எல்லாராலும் பேசப்படுகின்றன
  • "இந்த காலத்தில் பொய் சொல்லாமல் வாழவே முடியாது" .
  • "நான் செய்யும் தொழிலில் பொய் சொல்லாமல் இருக்க முடியாது"
  • "பிறருக்கு தீமை இல்லாமல் பொய் சொல்வதில் தவறல்ல"
  • "நன்மை பயக்குமானால் பொய் சொல்லலாம்"
நமது தெய்வ புலவர் திருவள்ளுவர் கூட:, .

"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்".
குற்றமற்ற நன்மை பயக்குமானால் பொய் சொல்வதும் உண்மை என்று கருதப்படும்"
என்று சொன்ன அவரே

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

என்றும் சொல்லி இருப்பதால் "தீமை இல்லாத பொய் குற்றமல்ல" என்ற அவர் வார்த்தையில் உள்ள மெய் பொருளை கொஞ்சம் பார்க்கலாம்.
.
இந்து மத புராணங்கள் படி ஒரேஒரு பொய் சொன்ன தர்மன் நரகம் போய பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றால், பல பொய் சொல்லும் நபர்களை பற்றி கேட்கவே வேண்டிய தேவையே இல்லை.

கிறிஸ்தவ வேதப்படி "பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரியும் கடலிலே பங்கடைவார்கள்" என்றும் "பொய் நாவை கர்த்தர் வெறுக்கிறார்" "நீங்கள் அவனவன் பிறரோடே உண்மையை பேசுங்கள்" என்றும் திட்டமாக கூறப்ப்பட்டுள்ளது.

திருக்குரான் படி : "உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள், உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" "பொய்யர்கள் மீது அல்லாவின் சாபம் உண்டாகட்டும்" "இறுதி நாளில்.. பொய்யர்கள் நஷ்டம் அடைவார்கள்" என்று உறுதியாக எச்சரிக்கப்படுள்ளது.
.
இவ்வளவு உறுதியாக பொய் சொல்லக்கூடாது என்று எல்லா மதங்களும் சொல்லும்போது, கொஞ்சம் கூட பயம் இல்லாமல் நாம் எவ்வளவு ஈசியாக பொய் சொல்கிறோம் பாருங்கள். பிறகு எப்படி தண்டனைக்கு தப்புவோம்!.
"ஒருவன் இன்னொருவனை கொலை செய்ய விரட்டி வரும் போது நமது வீட்டினுள் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்வது தவறல்ல" என்பது அநேகரின் வாதம்.

அவர்களிடம் நான் கேட்கும் கேள்வி "நீங்கள் பொய் சொல்லி காப்பற்றி விட்ட அவன், நாளை அனேக ரவுடிகளுடன் போய் தன்னை விரட்டியவன் குடும்பத்தையே அழித்துவிட்டால், அந்த குடும்பம் அழிய காரணம் நீங்கள் ஆகிவிடுவீர்களே!
.
அதுபோல் நல்லது நடக்கும் என்று போய் சொல்லி அது தனக்கே தீமையாக மாறி துன்பம் அனுபவித்தவர் எத்தனையோபேர்!
நாம் செய்யும் ஒரு செயலின் எதிர்கால விளைவு மற்றும் நன்மை தீமை இவற்றை தீர்மானிக்கும் திறன் நமக்கு இல்லாத காரணத்தால் வேதங்களின் எச்சரிக்கையை ஏற்றுக்கொண்டு பொய்யாய் முற்றிலும் தவிர்த்து தண்டனைக்கு தப்புவோமாக.

No comments: