Tuesday, April 15, 2008

பயம் ஓர் பயங்கரம்

"பயம்" என்ற இந்த மூன்றெழுத்து வார்த்தை இன்றைய உலகில் எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு மிகப்பெரிய சக்தியாக உள்ளது. பயம் என்பதே இல்லாத மனிதனே இருக்கவே முடியாது என்று கூட கூறலாம்.

எதிர்காலத்தை பற்றிய பயம், மரணத்தை பற்றிய பயம், பிள்ளைகள் பற்றிய பயம், நோயை குறித்து பயம், திருடன் குறித்து பயம், வேலையே பற்றிய பயம், உறவினர்கள் பற்றிய பயம், தீவிரவாதம் குறித்து பயம், சாமி பற்றி பயம், பேய் பிசாசு குறித்த பயம், சுய கௌரவம் பற்றிய பயம், குடும்ப மானம் பற்றிய பயம், இருக்க இடம் குறித்து பயம், குடிக்க தண்ணீர் குறித்து பயம், உண்ணும் உணவு குறித்து பயம், வானத்தை குறித்து பயம், பூமியை குறித்து பயம், கடலை குறித்து பயம், மலையை குறித்து பயம்

அப்பப்பா எத்தனை விதமான பயங்கள்!
.
இதுபோல் பல்வேறு விதமான பயங்களுடன் மனிதனின் வாழ்க்கை ஒவொரு நாளும் நகர்கிறது. அது பெரியவன் சிறியவன் கடவுளை நம்புபவன் நம்பாதவன் என்று யாரையும் விட்டு வைப்பதில்லை.
.
குடிசையில் இருப்பவனுக்கு நாளைய உணவுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்ற பயம் என்றால் கோபுரத்தில் இருப்பவனுக்கு சேர்த்த பணத்தை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து பயம்.
.
ஏன் உலக நாடுகளுக்கு ஜார்ஜ் புஷ்ஐ நினைத்து பயம் என்றால் ஜார்ஜ் புஷ்க்கு பின்லேடன் குறித்து பயம்.
.
இது போதாதென்று விஞ்ஞானிகள் அவ்வப்பொழுது இன்னும் 20 ஆண்டுகளில் அது இருக்காது, இது இருக்காது வடதுருவம் உருகிவிடும் தென் துருவம் நிரம்பிவிடும், சூரியன் சுட்டெரிக்கும் என்று அடிக்கடி தங்கள் பங்குக்கு எதாவது சொல்லி பயம் காட்டுவது வழக்கமாக போய்விட்டது.

ஒவொரு நாளும் இப்படி பயந்து பயந்து வாழவா இறைவன் நம்மை படைத்தார்? இந்த பயத்தின் மூல காரணம் தான் என்ன?
ஒன்றே ஒன்று தான் அது:
.
இறைவனை முழுமையாக அறியாமையே!
.
சர்வத்தையும் ஆண்டு நடத்தும் இறைவனை மிக பெரியவர், அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார் அவரன்றி அணுவும் அசையாது என்றெல்லாம் பெரிய பெரிய தத்துவம் பேசுபவர்கள் கூட, தனக்கு ஒரு சிறிய பிரச்சனை, நோய் என்று வந்து விட்டால் தான் கும்பிடும் அந்த இறைவன் மேல் முழு நம்பிக்கை வைத்து காத்திருக்காமல் பயந்து பல்வேறு இடங்களுக்கு ஓடுகின்றனர்? யார் யாரை எல்லாமோ தேடுகின்றனர்.
காரணம் என்ன?
.
அவர்கள் இறைவனை அறியவேண்டிய விதமாக அறியவில்லை என்பதுதான்.
.
இறைவனை சரிவர அறியாததால் அவரது மன விருப்பத்தை அறியமுடியாமல் அவர் எதிபார்க்கும் குறைத்த பட்ச சத்தியத்துக்கு கீழ்படிந்து நடக்க முடியாமல் பாவம் செய்து, பிரச்சனைகளில் இருந்து இறைவன் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையை இழக்கின்றனர்

பாவமே பயத்தை கொண்டுவரும்.
.
"பொய்யர் இரண்டாம் மரணமாகிய அக்கினிகடலில் பங்கடைவாவார்கள்" என்று சொல்லும் போது பொய் பேசுபவருக்கு கண்டிப்பாக பயம் வருகிறதல்லவா? நீங்கள் பொய் பெசுபவறல்ல என்றால் பயம் வராது அது போலத்தான் பாவமே பயத்தை கொண்டு வரும். (பயந்து உடனே பொய் பேசுவதை நிறுத்தப்போவது இல்லை அது வேறு விஷயம். பிரச்சனை வந்தால் தானே கடவுளை தேடி ஓடுவோம் அது போல் அக்கினி கடலுக்குள் போன பிறகு தானே அனேகருக்கு அறிவு வரும்)
.
பாவம் தான் பயத்துக்கு முதல் காரணம். ஆதமும் ஏவாளும் இறைவன் புசிக்காதே என்று சொன்ன கனியை புசித்ததும் இறைவனை பார்க்கவே பயம் வந்து ஓடி ஒளிந்து கொண்டனர். பாவம் என்பது மனிதனை அந்த பரிசுத்தம் உள்ள இறைவன் முன் நிற்க முடியாமல் நிர்வாணமாக ஆக்குகிறது.
பல வேளைகளில் நாங்கள் கும்பிடும் இறைவனே பயத்து ஓடி இருக்கிறார் குழந்தை போல எங்களை துன்புறுத்தி விளையாடுகிறார் அப்படி இருக்கையில் நாங்கள் பயப்படுவதில் தவறில்லை என்கிறீர்களா.
.
ஆமாம்! சாதரண மனிதனைப்போல் காமத்துக்கும், பயத்துக்கும், பொறாமைக்கும், யார் பெரியவன் என்ற போட்டிக்கும் அடிபணிந்து போகும் தேவர்களை இறைவன் என்று நினைத்து வணங்கினால் பயம் நம்மை ஒருபோது விடாது!
.
"பயப்படுகிறவர்கள்" இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரியும் கடலிலே பங்கடைவார்கள் என்று பைபிள் (வெளி 21:8) சொல்கிறது.
.
உண்மை இறைவனை அறிந்து அவர் வார்த்தைப்படி வாழ்ந்து பாருங்கள் நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டிய தேவையே இல்லை. எங்கு எது இல்லாமல் போனாலும், எங்கு என்ன நடந்தாலும் எனக்குள்ளதை இறைவன் பாதுகாப்பார் என்றும், வானமே இடிந்து விழுந்தாலும் அது என்னை ஒரு போதும் அணுக முடியாது அசைக்க முடியாத நம்பிக்கையும் வரும்.
.
அது ஒன்று தான் பயத்தை புறம்பே தள்ளும் .

No comments: