Saturday, May 3, 2008

மதம் ஒரு வாகனமா? வழியா? அல்லது வழிகாட்டியா?

மீண்டும் மதம் என்ற வார்த்தயில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!
.
மதம் என்பது நமக்கு எந்த விதத்தில் இறைவனை அடைய உதவுகிறது என்பதை இந்த தலைப்பில் பார்ப்போம்.
.
மதம் என்பது இறைவனிடம் நம்மை கொண்டுசெல்லும் ஒரு வாகனமா?
வாகனம் என்பது ஒருவரை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சொல்ல பயன்படும் ஒரு கருவி. உதாரணமாக வேலூர் பேருந்தில் ஏறினால் அது நம்மை வேலூர் கொண்டுபோகும்.
.
ஆனால் மதம் என்பது அப்படி அல்ல. எந்த மதத்தின் உள்ளே நீங்கள் இருந்தாலும் அந்த மதம் உங்களை ஒருபோதும் இறைவனிடம் கொண்டு சேர்க்காது. மதங்கள் சொல்லும் வார்த்தைகளின் படி வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே நாம் இறைவனை சென்று அடையமுடியும். எல்லா மதங்களும் மனிதனுக்கு போதனையை தான் சொல்லுமே தவற அது நம்மை தூக்கி இறைவனிடம் கொண்டு சேர்க்காது.
.
மதம் என்பது இறைவனை அடையும் வழியா?
.
ஒரு வழியின் தன்மை என்னவென்றால் அந்த வழியில் நாம் சரியாக நடக்கும் போது அதுசரியான இலக்கில் கொண்டு சேர்க்கும் தன்மை உடையாது. உதாரணமாக திருச்சி போகும் சரியான வழியில் அடி பிசகாமல் செல்வோமென்றால் அது நம்மை திருச்சி கொண்டு சேர்த்துவிடும்.
.
ஆனால் இங்கு ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக சொல்கிறது பிறகு எப்படி அது சரியான வழியை காட்ட முடியும்?
உதாரணமாக
இந்து மதம் உருவ வழிபாட்டை உடையது
ஆனால்
இஸ்லாமும், கிறிஸ்தவமும் சிலை வழிப்படி செய்பவர்கள் நரகம் செல்வார்கள் என்று கடுமையாக கண்டிக்கிறது.
.
கிறிஸ்தவம் இயேசுவே பாவத்தை மன்னிக்கும் பலி என்றும் அவர் தேவனின் குமாரன் என்றும் சொல்லி அவரை வழிபடுகிறது
.
ஆனால்
இஸ்லாம் அவர் இறைவன் அல்ல அவரை வழிபடுபவர்கள் நரகம்தான் போவார்கள் என்று முரணான கருத்தை தெரிவிக்கிறது.
.
இப்படி மாற்றி மாற்றி சொல்லும் போது மதம் எப்படி இறைவனை அடையும் வழியாக இருக்க முடியும்?
.
மதம் என்பது வழி காட்டியா?

ஆம் அன்பானவர்களே! இந்த வழியில் போனால் இறைவனை பார்க்க முடியும் என்று கையை காட்டும் ஒரு வழி காட்டியே மதங்கள் என்பது!
எந்த மதமானாலும் அதை தான் செய்கிறது. எந்த மதம் காட்டும் வழியில் நாம் பயணம் செய்தாலும் இறைவன் வந்து நமது கரங்களை பற்றினால் மட்டுமே அவரை சென்று அடைய முடியுமே தவிர நமது சுய முயற்ற்சியால் எவ்வளவு தான் தேடினாலும் அவரை கண்டடைய முடியாது.
.
அவர் வந்து நமது கரங்களை பிடிக்க வேண்டுமானால் அவர் மனதுக்கு ஏற்றபடி நேர்மையான, கள்ளம் கபடு அற்ற, பிறர்போற்றும் வாழ்க்கை வாழ வேண்டும் மற்றும் உலக காரியங்களை விட இறைவன் மேல் ஒரு தீராத வாஞ்சை வேண்டும். அதன் அடிப்படையில் தான் அவர் நம்மை கரம் பிடிப்பார் .
.
அதை விட்டு விட்டு வழி காட்டியாகிய மதத்தை பிடித்து தொங்கிக்கொண்டு இது என்னுடையது அது உன்னுடயாது என்று சண்டை போடுவதில் எந்த பயனும் கிடையாது.



No comments: