Friday, May 16, 2008

கெட்டுப்போன காப்பியும் மனித ஆன்மாவும்!

அன்பானவர்களே!

எனது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு கப் காப்பி யாரும் குடிக்காத காரணத்தால் கேட்டுபோனது. மறுநாள் அது கழிவுநீர் செல்லும் இடத்தில் கொட்டப்பட்டது. இதை பார்த்த நான், என் மனதில் இந்த நிகழ்ச்சியை ஆராய்ந்த போது கிடைத்த பதில்தான் இந்த பதிப்பு.

காப்பி வைக்கப்படும் போது எப்படி இருந்தது?

அது தயார் செய்து வைக்கப்படும் போது நல்ல மணமாகவும் சுவையாகவும்
பிறருக்கு உபயோகப்பட கூடியதாகவுமே இருந்தது.

அதுபோல் மனிதனும் இறைவனால் படைக்கப்படும் போது நல்லவனாகவும் பிறருக்கு பயனுள்ளவனாகவும் எந்த ஒரு கள்ளம் கபடம் இல்லாதவனாகவும்தான் படைக்கப்படுகிறான்

காப்பியை யார் கெட்டுப்போக வைத்தார்கள?

காப்பியை கேட்டுப்போகும்படி யாரும் எதுவும் செய்யவில்லை அது தானாகவே கெட்டுப்போய்விட்டது.

அதுபோல் மனிதனும் கெட்டுப்போக எதுவுமே செய்யவேண்டிய தேவையே இல்லை. இந்த உலகத்தில் பிறந்தாலே போதும் அவன் கெட்டுப்போகும் சூழ்நிலை தானாகவே ஏற்படும்.

காப்பி எதனால் கெட்டுப்போனது?

காற்றில் உள்ள அசுத்த கிருமிகளினால் கெட்டுப்போனது

அதுபோல் மனிதன் காற்றில் கலந்துள்ள அசுத்த ஆவிகளினாலும், உலகில் உள்ள அசுத்தங்களை ஆபாசங்களை பார்ப்பதினாலும் கெட்டுபோகிறான்.

காப்பியை கெட்டுப்போகாமல் பலநாள் வைக்க முடியுமா?

காப்பி எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருந்தால் நிச்சயம் கேட்டும்போகும். அனால் அசுத்த காற்று பாதிக்கமால் பாதுகாப்பாக பல நாளாக வைக்க நல்ல அணல் அல்லது குளிர் வேண்டும்.

அதுபோல் மனிதன் இந்த உலகில் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட சர்வ வல்ல இறைவனின் அரவணைப்பு அவசியம் வேண்டும் அவர் அரவணைப்புக்குள் இல்லை என்றல் நிச்சயம் கேடுப்போவோம்.

கெட்டுப்போன காப்பியின் முடிவு என்ன?

கெட்டுப்போன காப்பி எதற்கும் உதவாது, அது கழிவுநீராக அசுத்தத்தோடு அசுத்தமாக மாறி பாதாள சக்கடைக்கு போய்விடும்.

அதுபோல் கெட்டுப்போன மனிதனும் அசுத்த ஆவிகளோடு சேர்ந்து அதன் ராஜ்யமாகிய பாதாள லோகத்துக்கு பொய் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

கெட்டுப்போன காப்பியை சரி செய்ய முடியுமா?

கெட்டுப்போன காப்பியை எவராலும் சரிசெய்ய முடியாது. அனாலும் அதை நன்றாக கொதிக்கவைத்து வரும் ஆவியை குளிரவைப்பதன் மூலம் ஒரு நல்ல நீராக அதை மாற்ற முடியும்.

அதுபோல் ஒருவன் இந்த உலகுக்கு மரித்து, ஜலத்தினாலும் ஆவியினாலும் திருப்ப பிறந்தால் தேவனுடைய ராஜ்யத்துக்கு தகுதி உள்ளவனாக மாறுவான்.


அன்பானவர்களே!

இந்த உலகத்தில் எந்த ஒரு பொருளை பிரெஷ்சாக செய்து வைத்தாலும் ஓரிரு நாளில் தானாகவே கெட்டுப்போய்விடும். கெட்டுப்போகாமல் பாதுகாக்கவே முயற்சி தேவையே அன்றி கெட்டுப்போக எந்த முயற்சியும் தேவையே இல்லை.

அதொபோல் ஒருவன் கெட்டுப்போக ஒன்றுமே செய்ய வேண்டிய தேவையே இல்லை! அவன் இந்த உலகத்தில் பிறந்தாலே போதும் தானாகவே கேட்டு பாதளம் போய்விடுவான் என்று பார்த்தோம்.

அநேகர் நான் ஒன்றுமே செயவில்லை நான் மிகவும் நல்லவன் என்று நினைக்கின்றனர் அது தவறு நீங்கள் கெட்டுப்போனது உங்களுக்கே தெரியாது பரிசுத்தமான இறைவனிடம் வந்து பார்த்தபின்தான் தெரியும் நீங்கள் கேட்டுபோய் இருந்தது.

எனவே எந்த சாக்கு போக்கும் சொல்லாமல் இன்றே இறைவனிடம் வாருங்கள்.

No comments: