Tuesday, May 6, 2008

சுகபோக வாழ்க்கையின் முடிவு!

அன்பானவர்களே!

ஒரு நாள் நான் என் நண்பர் ஒருவரிடம் இறைவனை பற்றி உயர்த்தி பேசிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது அவர் என்ன சார் கடவுள் கடவுள் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் எல்லாம் நல்ல பணம் புகழோடு 90 வயது வரை வாழ்கின்றனர். நீங்கள் கடவுள் கடவுள் என்று பேசி என்ன கண்டீர்கள்? பிறருக்கு அடிமையாக தானே இன்னும் வேலை பார்த்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். என்று சலிப்போடு சொன்னார்.
.
இதை போல இறைவனை தேடும் பலருக்கு சலிப்பும், இறைவனை தேடுவதால் எந்த பயனும் இல்லையோ என்ற எண்ணமும் வரக்கூடும். ஏனெனில் இந்த உலகில் எல்லாமே அப்படிதான் நடக்கிறது. இறைவனை நம்பாதவர்கள், ஏமாற்றுபவர்கள், கொள்ளை அடிப்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், ஊழல் செய்பவர்கள் எல்லாம் மிக சுகபோகமாக வாழ்க்கை நடத்துகின்றனர். ஆனால் இறைவனை தேடுபவருக்கு அதில் கொஞ்சமும் கிடைப்பது இல்லை அனேக நேரங்களில் இருப்பதும் கையைவிட்டு பிடுங்கப்பட்டு போய்விடுகிறது இது ஏன்? என்ற கேள்வி எழலாம்.
.
இதற்கான பதிலை ஒரு சின்ன கதை மூலம் விளக்குகிறேன், முன்னமே இந்த கதையை தெரிந்தவர்கள் ஒருமுறை ஞாபகபடுத்திகொள்ளவும்.
.
ஒரு குடியானவன் ஒரு கழுத்தையும் ஆடும் வளர்த்தானாம். ஒவ்வொரு நாளும் கழுதைக்கு சுமையை ஏற்றி, காலையில் இருந்து மாலை வரை அதற்கு எப்பொழுதும் கடின வேலைதானாம். சரியான உணவு இல்லாமால் கொஞ்சம் தளர்ந்தாலும் உடனே அடி உதை என்று ரொம்ப பாடு பட்டதாம் அந்த கழுதை. .
.
ஆனால் இந்த ஆடு ஒரு நாளும் அடிபட்டதே கிடையாதாம், நேரத்துக்கு சரியான உணவு மற்றும் எல்லா வசதியும் உடனுக்குடன் கிடைத்ததாம் அதுவும் நன்றாக தின்று கொழுத்துபோய் இருந்ததாம். அந்த கழுதைக்கு ஆட்டை பார்க்கும் போதெல்லாம் ஒரே பொறாமை. நானும் இந்த பூமியில் பிறந்துள்ளேனே! பிறந்தால் இந்த ஆட்டை போலல்லவா இருக்க வேண்டும்! என்று நினைத்து ஒவ்வொரு நாளும் மிகவும் வேதனை படுமாம்
.
ஒரு நாள் அந்த குடியானவன் ஒரு பெரிய கத்தியை எடுத்து தீட்டினானாம் கழுதை மிகவும் பயந்து நடுங்க ஆரம்பித்தது இன்றோடு நாம் தொலைந்தோம் அடி உதை போதாது என்று கத்தி வெட்டு வேறு கிடைக்க போகிறது என்று நடுங்கியதாம். ஆனால் ஆடு எதை பற்றியும் கவலை இல்லாமல் தின்றுகொண்டே இருந்ததாம்.
அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.
அதுபோன்றதொரு முடிவுதான் இறைவனை அறியாமல் சுகபோகமாக வாழும் மக்களுக்கும்! அவர்கள் இறைவனை அறிய விரும்பவில்லை. அற்ப வருடம் வாழப்போகும் இந்த பூமியின் இன்பங்கள் மேலேயே அவர்கள் கண்கள் உள்ளது. இறைவன் எத்தனை எச்சரிப்பை கொடுத்தாலும் அவர்கள் கேட்பது இல்லை ஏனெனில் உலக சுகபோகம் அவர்கள் கண்களை மறைக்கிறது.
"அவர்கள் பூமியில் சம்பிரதாயமாய் வாழ்ந்து, ஷனப்போழுதில் பாதாளத்தில் இறங்குகிறார்கள்" என்று பைபிள் சொல்கிறது
.
உலகத்தில் சுகபோகமாக வாழ்ந்து மரித்த ஐஸ்வர்யாவான், லாசரு பற்றி ஏசு சொல்லும் போது அவன் சுகபோகமாக வாழ்ந்த ஒரே காரணத்துக்காக நரகம் கொண்டு போகப்பட்டான். ஏனெனில் அவன் இறைவனை பற்றி அறிந்துகொள்ளவே விரும்பவில்லை.
.
பணக்கார நண்பன் ஒருவனிடம் இறைவனை தெரிந்துகொள் என்றால் "நான் ஏன் அவரை தெரிந்துகொள்ள வேண்டும் எனக்கு எந்த குறையும் இல்லை, அவரை தெரிந்து கொள்வதால் எனக்கு என்ன லாபம்?" என்று கேட்கிறான்.
.
நீங்கள் எங்கே இருந்து வந்தீர்கள், மரித்தபின் உங்கள் ஆத்துமா எங்கே போகிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியாது, அது இறைவனின் கையில் இருக்கும்போது அவரை பற்றி அறியவிரும்பாமல் வாழ்வது எவ்வளவு மதியீனம்!

எனவே உலகில் உள்ள எல்லா காரியங்களை விட இறைவனுக்கு முதலிடம் கொடுகள். அது ஒன்றே இந்த உலகிலும், மரணத்துக்கு பின்னும் கூட உங்களை காக்கும்.
.
நல்ல கருத்து.. கதையும்... நல்ல விஷயத்தை அன்போடு சொல்கீறீர்கள்..
நன்றி சுந்தர் அவர்களே.. தொடருங்கள்....
-- சாந்தி. த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
.
காமேஷ்
சோம்பேறிகளும், சிந்திக்கத் தெரியாதவர்களும், தான் இறைவன் என்ற இல்லாத ஒன்றை தேடி, ஓடி நேரத்தை வீணாக்குவதாக எண்ணுகிறேன்.


நண்பர் காமேஷ் அவர்களே!

சுறு சுறுப்பான சிந்திக்க தெரிந்த நீங்கள், உங்கள் சுவாசத்தை ஒரு 10 நிமிடம் நிறுத்தி வையுங்களேன் பார்ப்போம் அல்லது உண்ணும் உணவை ஒரு நாள் முழுவதும் செரிக்கமால் இருக்க வைக்க முடியுமா?
நீங்கள் விருபினாலும் விரும்பாவிட்டாலும் இவை எல்லாம் தானாக நடக்கிறது. உங்களையே உங்களால் கட்டுப்படுத்த முடியாத போது நம்மை எதோ ஒரு சக்தி தன் கையில் வைத்துள்ளது என்று ஏன் உங்களால் நம்ப முடியவில்லை
தான் எந்த தாய் வயிற்றில் பிறந்தோம் என்பதையே இன்னொருவர் சொல்லித்தான் அறிந்து கொள்ளும் அற்ப பிறப்பாகிய மனிதன், கடவுளே இல்லை என்றும் தன்னையே கடவுள் என்று பீற்றிகொள்வதுதான் என்னால் தாங்க முடியவில்லை.
... SUNDAR

.

ஓஹோ அப்ப கடவுளை கும்பிட்டா இதெல்லாம் செய்ய முடியுமா ?
கடவுளை கும்மிட்டா.. 2 கை அதிகமா வரப்போகுதா ? இல்லை காலோ, கண்ணோ இல்லாதவர்களுக்கு மறுபடியும் கிடைக்கப் போகுதா ? இல்ல ஜிம்பாபேயில் ராபர்ட் முகாபே பதிவி விட்டு இறங்கிடப் போறாரா ? இல்ல நான் தான் முதலமைச்சரா ஆக முடியுமா ?
கடவுளை இருக்கார்னு சொன்னங்க கிடைக்கும் ?
சொர்க்கம் கிடைக்கும்னு சொல்லி எங்க வாயை மூடிடாதீங்க..
ஏதாவது நல்லதா சொல்லுங்க
.

...காமேஷ்

.

காமேஷ் அவர்களே!
பள்ளியில் ஆசிரியர் மாணவர்களை பார்த்து ஒவ்வொருவரும் நமது அப்பா அம்மாவுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்று போதிக்கும் போது
மதிப்பு கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும்?
என்று அறியாமல் கேட்கும் ஒரு சிறு குழந்தை கேள்விபோல் இருக்கிறது உங்கள் கேள்வி.
நீங்கள் என்னென்ன முடியுமா என்று கேட்கிறீர்களோ அதேலாமே இறைவனால் செய்ய முடியும். முடியாதது என்று அவருக்கு ஒன்றும் இல்லை.
இன்று இளமை நாளை முதுமை இது எல்லோருக்கும் தெரிந்தது தான்!
ஆனால் அந்த முதுமையோ அல்லது ஒரு விபத்தோ நடந்து தான் சுயமாக ஒன்றும் செய்ய முடியாமல் ஒவ்வொன்றுக்கும் பிறரை சார்ந்து நிற்கும் போதும், அவர்கள் நம்மை துச்சமாக மதித்து இவன் ஏன் இருக்கிறான் என்று ஒதுக்கும் போதும் தான் தெரியும் அதன் உண்மை வேதனை.
தனக்கு வந்தால் தானே தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்பார்கள் அதுபோல் நன்றாக இருக்கும் போது என்ன வேண்டுமானாலும் பேசலாம்.
மனிதர்கள் எல்லோரும் ஒரு நாளில் இவனால் எந்த பயனும் இல்லை இவனுக்கு எதுவுமே செய்ய முடியாது என்று கை விட்டுவிடலாம் ஆனால் நம்மை எந்த சூழ்நிலையிலும் கை விடாதவர் இறைவன் ஒருவரே. அவர் எந்த விதத்தில் நமக்கு பாதுகாப்பு தருவார் என்பதை அனுபவத்தில் தான் புரிய முடியும்.
அறியாத குழந்தைகளுக்கு ஓரளவுக்கு தான் விளக்க முடியும்

....SUNDAR

.

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியென்று நிச்சயம் ஒன்று உள்ளது. ஆனால் நாம் செலுத்தும் நன்றியை புரிந்துகொள்ளவோ நம் வேண்டுதலைக் கேட்டுக்கொள்ளும் சக்தியோ அச்சக்திக்கு இல்லை.
-- பச்ச‌ புள்ள விஜய டீ.ஆர். இரசிகர் மன்றம்‌;

.

அதாவது அந்த சக்திக்கு கண் காது இல்லை என்று சொல்கிறீர்களா?
இங்கிருக்கும் நீங்கள் ஜார்ஜ் புஷோடு உடனே பேசிவிட முடியுமா அல்லது நீங்கள் பேசினால் அவருக்குத்தான் கேட்குமா. அதற்க்க்காகக அவருக்கு என்னை புரிந்துகொள்ளும் அறிவு இல்லை என்று கூறுவது சரியா?
ஒரு மனிதனிடமே உடனே பேசமுடியாது பிறகு இறைவனை பற்றி அறியாமல் அப்படி சொல்வது முறையல்ல

...SUNDAR

.

சூழல் / இயற்கைன்னு சொல்ல வரேன்.
அந்த இயற்கையை கட்டுப்படுத்துபவந்தான் இறைவன்/ இயற்கைதான் இறைவன் என‌ எல்லா மதவாதிகளின் வழக்கம் போல மறுபடியும் வாதிட வந்தால் எனக்கு வழக்கம் போல பதில் சொல்ல வராது. :)
கண்டுபிடிக்கப்படாதவைகளுக்கு கடவுள் என பெயர் சூட்டி நிறைவடைகிறீர்கள் நீங்கள். நிறைவடையாதவைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம் நாங்கள். நிறைவடையாதவை நிறைந்தால் கடவுள் மறைவார்.
-- பச்ச‌ புள்ள விஜய டீ.ஆர். இரசிகர் மன்றம்‌;

.

பச்ச புள்ள அவர்களே!
நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை அறிந்திருப்பது மகிழ்ச்சியே!
ஆனால் அது இயற்கை என்ற கூற்று சரியல்ல ஏனெனில் இயற்கையை படைத்தவர் இறைவன் தான்.
உதாரணமாக நான் ஒரு செல்போன் கொண்டுவந்து உங்களிடம் காட்டுகிறேன், அதை பார்த்த நீங்கள் "இது மிகவும் நன்றாக இருக்கிறது நானும் அதுபோல் ஒன்று வாங்க வேண்டும் இது எங்கே கிடைக்கிறது என்று கேட்கும் போது
நான் இது எங்கும் கிடைக்க வாய்ப்பில்லை
எனது அலுவலகம் பக்கத்தில் ஒரு ஏலக்ட்ரோனிக் கம்பனி இருந்தது அது ஒரு நாள் திடீர் என்று வெடித்துவிட்டது அது வெடித்த போது அங்கிருந்த பல பொருட்கள் ஒன்றாக சேர்ந்து இந்த மொபைல் உருவாகி ஏன் பக்கத்தில் வந்து விழுந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
அது போல் சூரியனில் இருந்து சரியான தொலைவு, நீள் வட்ட பாதயில் சூரியனை சுற்றுவது, மழை, காற்று, வாயு மண்டலம் என்று பார்த்து பார்த்து இறைவனால் வடிவமைக்கப்பட்ட ஒரு இடத்தை இயற்கையாய் வந்தது என்று சொன்னால் சிரிப்பதை தவிர வேறு என்ன செய்ய!
மனித உடம்பை எடுத்துக்கொள்ளுங்கள் அது எத்தனை நேர்த்தியாக வடிவமக்கப்படுள்ளது, உங்கள் பல்லை பாருங்கள் எல்லா பல்லும் எல்லா விரலும் ஒன்றுபோல் இருந்தால் கூட நமது செயல்கள் பாதிக்கப்படும் அதற்கு தகுந்தால் போல் திட்டமிட்டு இறைவனால் வடிவமக்கப்படுள்ளது
எல்லாவற்றையும் பயன்படுத்தி சுகமாய் வாழ்ந்து கொண்டு, எல்லாம் தானாக இயற்கையாய் அமைந்தது என்று சொல்வது என்னய்யா நியாயம்?

...SUNDAR

No comments: