இறைவன் பூமியை படைத்து அதற்கு எந்தவித தாங்குதலும் இல்லாம் அந்தரத்தில் தொங்க வைத்தார் அதிலுள்ள எந்த ஒரு பொருளும் அதை விட்டு கடந்து போகாமல் இருப்பதற்காக தாயாகிய பூமிக்கு தன்னில் உள்ள பொருட்களை ஈர்க்கும் சக்தியை கொடுத்தார். அதனால் ஆப்பிள் பழம் பூமியை நோக்கி கீழே விழுகிறது.
அதற்குப்பின் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சர் ஐசக் நியுட்டன் அவர்கள் பூமிக்கு உள்ள அந்த சக்தியை கண்டுபிடித்து அதற்கு புவி ஈர்ப்பு விசை என்று பெயரிட்டார் அனாலும் கி பி 4ம் நூற்றாண்டிலேயே பிரம்மகுப்தர் என்னும் குப்த அறிஞர் தனது பிரும்ம சித்தாந்தம் என்ற தனது நூலில் புவி ஈர்ப்பு விசை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமா காரணம் இன்னும் உண்டு
பூமியில் உள்ள உயிரினங்கள் எல்லாம் தன்னை போன்ற உயிரினங்களை உருவாக்கி பூமியை நிரப்ப வேண்டும் என்ற இறைவனின் திட்டப்படி தொடர்புடைய பொருட்களுக்கு ஒன்றை ஒன்று ஈர்க்கக்கூடிய கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தியை கொடுத்தார்.
ஆப்பிள் பழத்தில் உள்ள விதைக்கு தன் உருவான மரத்தை போல மரத்தை உருவாக்கும் வல்லமையை கொடுத்தார் பூமிக்கு அத விதையை உயிர்ப்பிக்கும் ஜீவனை கொடுத்தார் தொடர்புடைய பொருட்கள் அந்த ஈர்க்கும் சக்தியால் ஒன்று சேர்கின்றன அதனால் ஆப்பிள் கீழே விழுகிறது.
.
.
காரணம்- 4
> இப்போது ஒரு பழைய கேள்வி. இறைவனைப் படைத்தது யார்?
> இல்லை வேறு ஒரு கேள்வி. ஏன் படைத்தார்? நண்பர்களே!
எனினும் பதில் இல்லாத கேள்வி என்று ஒன்றும் இல்லை.
சில துளி திரவத்தில் இருந்து தான் இவ்வளவு பெரிய மனிதனாக நாம் உருவானோம் என்பதும் ஒரு சிறு விதையில் இருந்து தான் இவ்வளவு பெரிய மரம் வந்தது என்பதும் எப்படி நம்ப முடியாத உண்மையாக இருக்கிறதோ அதை போல
இறைவன் இல்லை என்றும் மனிதன் தான் கடவுள் என்றும் பலவாறு கேள்விகள் கேட்கும் அன்பர்களே!
இறைவன் யாருக்கும் தன்னை மறைக்கவும் விரும்பவில்லை யாரும் தன்னை வீணாக வணங்க வேண்டும் என்றும் தான் ஒரு முதலாளிபோல இருக்க வேண்டும் என்று விரும்பவும் இல்லை.
மனிதன்தான் அவரை விட்டு பிரிந்து பின்னால் ஓடுகிறான். ஏனெனில் அவர் வைத்திருக்கும் மனசாட்சிக்கும், அவர் உலகில் நியமித்திருக்கும் நீதி நியயங்களுக்கும், உலகின் சட்ட திட்டங்களுக்கும் ஒரு இடத்தில் கீழ்படியாமல் நடக்கும் போதும் அவரை விட்டு ஒரு மயில் தூரம் பின்னால் போகிறோம்.
சரி இன்றே இறைவன் வந்து நான் தான் இறைவன் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள், உடனே அவர் சொல்வதை எல்லாம் கேட்டு அதற்கு முழுமையாக கீழ்படிந்து பொய், திருட்டு, வஞ்சம், பொறாமை,எரிச்சல், இச்சை, பண ஆசை, எல்லற்றவ்ற்றையும் விட்டுவிட்டு அவரின் சொல்லுக்கு முழுமையாக கீழ்படிந்து வழமுடியுமா?
நீங்கள் எந்த இறைவனையும் கும்பிட வேண்டிய தேவை இல்லை, எந்த கோவிலுக்கும் போக வேண்டிய தேவை இல்லை. உங்கள் தேவைகளை விட பிறர் தேவையையும், உங்களை நேசிப்பதை விட பிறரை நேசிப்பதிலும், உங்களுக்காக செலவழிப்பதை விட பிறருக்கு செலவழிப்பதில் மகிழ்ச்சி உடையவராகவும், பிறருக்காக எதையும் இழக்க தயாராகும், ஒரு குழதையை போல கீழ்ப்படியும் தன்மை உடையவராகும் இருந்தால் நான் 100% அடித்து சொல்கிறேன் நீங்கள் எங்கு இருந்தாலும் இறைவன் உங்களை தேடி வருவார்.
நான் இறைவனை தேடி எங்கும் போகவில்லை அவர் என்னை தேடி வந்தார். அவர் நடத்தும் விதம் நமக்கு பயித்தியமகத்தான் தெரியும் ஆனாலும் அதில் உள்ள உண்மை நமது சாதரண அறிவுக்கு எட்டாது. அவர் தனது அறிவில் கொஞ்சம் நமக்கு தரும் போதுதான் எல்லாமே நியாயம் என்று நமக்கு புரியம். நாம் நாளைய நிலையை பற்றி சித்திப்போம் இறைவன் 400 வருடங்களுக்கு அப்பால் உள்ளதை சிந்திப்பார். எனவே நீர் என் என்னை இதை செய்ய சொல்கிறீர் என்று நாம் அவரிடம் கேள்வி கேட்ககூடாது. நமது தகப்பன் நமக்கு நல்லதை தான் சொல்வார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டால் அது நமக்காக மட்டுமல்ல இந்த உலகில் எல்லோருக்கும் நன்மையாக முடியும்.
நீங்கள் அப்படி இருக்காதவரை அவர் தன்னை உங்களுக்கு தெரியப்படுத்தினால் உங்களுக்கோ அல்லது அவருக்கோ எந்த பயனும் இல்லை. சும்மா அன்பு அன்பு என்று சொல்லிக்கொண்டு நான் எனது இஸ்டப்படி வாழ்வேன் அவர் வந்து என்னை சந்திக்க வேண்டும் என்று நினைப்பது எந்த தகுதியும் இல்லாமல் எனக்கு IAS பட்டம் வேண்டும் என்று கேட்பதற்கும் சமம்.
உண்மையான அன்பு என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா? "பிறருக்காக (அதாவது அவன் நமது எதிரியாக இருந்தாலும்) தனது ஜீவனை கொடுக்க தயாராக இருப்பது தான் உண்மையான அன்பு.
அப்படி ஒரு அன்பு இல்லாதவரை அன்பு என்று பேசுவதெல்லாம் வெறும் வீண் பேச்சு.
முதலில் உங்களை நீங்கள் தகுதிபடுத்துங்கள் இறைவன் உங்களை தேடி வருவார். நாம் இறைவனை தேடுவதைவிட 100 மடங்கு அதிகமாக அவர் மனிதனி தேடிக்கொண்டு இருக்கிறார்
SUNDAR
எல்லோரும் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் இந்த உலகத்தில் எத்தனை பேர் அவரவர் மதக் கோட்பாடு படி முழுமையாக வாழத் தயாராக இருக்கிறார்கள்???
ஒரு வேளை அப்படி இருந்தார்களே ஆனாலும் இந்த உலகம் எப்படி இருக்கும், ஒரு மயான பூமியும். ஒரு மியூசியம் (தமிழில் என்ன?) போலவும் தான் இருக்கும்.
பூமியில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் ஒருவன் வாழ்வதே சாலச் சிறந்தது. எனக்கு அது போதும். நான் முழுமையாக வாழ வந்தவன், வாழ்வை கோட்பாடுகளுக்கு அடகுவைத்து விட்டு இறந்த பின்னர் கிடைக்கப் போகும் பலனுக்காக எனது வாழ்வைத் தொலைக்க நான் தயார் இல்லை.
இறந்த பின்னரும்... என்ற ஒரு மூர்க்கமான வார்த்தையினால் இங்கே இராமனும், இயேசுவும், புத்தனும் தோன்றியிருக்கிறார்கள், மேலும் அக்கலீஸ், நெப்போலியன், அசோகா, இன்னும் எத்தனையோ ஆயிரம் சரித்திரத்தில் இடம் பிடித்த கொலை காரர்களும் தோன்றியிருக்கிறார்கள்.
புத்தனைப் போல் அன்பு மட்டுமே பரப்பியவர்களும், அவர்கள் சென்ற பிறகு அந்த அன்பென்ற மதத்தைக் கொலைவெறியுடன் பரப்பிக் கொண்டிருக்கும் மத அடிவருடிகள் இருப்பதுதான் உண்மை.
ஏதோ ஒற்றை வரியில் சாந்தி அக்கா புரிதலில் தவறு, மதகுருமார்களை வைத்து எடை போடாதீர்கள் என்கிறார்கள். இதோ கேட்கிறேன், மத குருமார்களை வைத்து எடை போடக்கூடாது என்றால் வேறு எவரை வைத்து எடை போடுவது???? பைபிளையே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியவர்கள்தான் மதகுருமார்கள், நீங்கள் கையில் வைத்திருக்கும் பைபிள் இயேசுபிரானால் சொல்லப் பட்டதை அப்படியே எழுதியதா???
பாஸ்கர் (Baskar) அங்கப்பன்
அன்பர் பாஸ்கர் அவர்களே!
நீங்கள் சொல்வது போல் எனது வாழ்க்கை துறவி போல இல்லை, நானும் எல்லாவற்றையும் அனுபவிக்கிறேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் ஆனால் அவற்றால் பிறருக்கு தீமை இல்லாதபடி பார்த்து அனுபவிக்கிறேன் அவ்வளவுதான்.
இறைவனி அறிந்த நாளில் இருந்து எனது உடம்பில் இன்ஜெச்டின் என்று போட்டு 14 வருடம் ஆகிறது. ஜலதோஷம் தான் எனக்கு வந்த மிகப்பெரிய வியாதி. எனது குடும்பத்தில் மொத்தம் 5 பேர் மருத்துவ மனைக்கு நான் ஒரே நேரத்தில் அதிக பட்சம் செலவழித்தது 2000/- மட்டுமே அதுவும் எனது மகன் பிரப்புக்காக. நான் வேலை தேடி எங்கும் அலைவதே கிடையாது தானாக கூப்பிட்டு சம்பள உயர்வுடன் வேலை தருவார்கள். எல்லாவற்றையும் விட இந்த வானமே இடிந்து விழுந்தாலும் அது என்னை ஒன்றுமே செய்ய முடியாது இறைவன் என்பக்கம் இருக்கிறார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை என்னிடம் உண்டு எனவே என் குழந்தைகளுக்கு தடுப்பூசி கூட நான் போடுவது கிடையாது. இப்படி இறைவன் என்னை காக்கும் விதங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்
இறைவன் உங்களை ஒரே அச்சில் வார்த்த பொம்மை போலெல்லாம் இருக்க சொல்லவில்லை உங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நீதி நியாயங்களுக்கு கீழ்படிந்து பிற மனிதனை தன்னை போல் நேசித்துதான் வாழ சொல்கிறார். உங்களை போல நானும் 10 மாதம் தான் அது போல் புத்தர், மாவீரர் எல்லோரும் நம்மைபோல் மனிதர்கள் தான். என்னால் செய்ய முடிந்தது உங்களால் என் செய்ய முடியாது ஏன். இதே கேள்வியை நாளை இறைவன் உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?
முயற்சி வேண்டும் இரண்டாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் வேண்டும் அவ்வளவுதான்
இறைவன் தேவை உள்ள எல்லாமே மனிதனுக்கு அனுபவிக்க அனுமதி கொடுத்துள்ளார் ஆனால் அதற்கு ஒரு வரைமுறை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் அதை மீறி நாம் அனுமதிக்கும் போது அது பாவமாகிவிடுகிறது அவ்வளவுதான்
மற்றபடி இறைவன் நமது சுகத்திலும் இன்பத்திலும் மிகவும் கரிசனை உள்ளவர்.
இறைவனை பற்றி அறியாமல் அதைப்பற்றி அப்படி இப்படி என்று பேசுவதை விட உணர்ந்து அறிந்து அதன்பின் பேசுங்கள். இறைவனை முழுமையாக அறியாமல் அவரை பழிக்காதீர்கள்.
SUNDAR
எனது வாழ்வில் நான் யாருக்கு துரோகம் செய்ததில்லை, எனது பொய்யால் சிலரை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறேனே தவிர துன்பப் படுத்தியதில்லை. யாரிடமும் பணம் வாங்கி பின் அவரை ஏமாற்றியதில்லை. உயிர்களைக் கொல்வது தவறென்று மாமிசமே உண்பதில்லை (என்னைக் கடிக்கின்ற கொசுவை அடிப்பதுண்டு!), எனது பக்கத்து வீட்டில் நுழைய எண்ணிய பாம்பை அடித்துக் கொண்றிருக்கிறேன் (இறைவன் அவர்களைக் காப்பாற்றுவார் என்று என்னால் நிம்மதியா இருக்க முடியாததாலும், அங்கே இருக்கின்ற இரண்டு சின்னக் குழந்தைகளை எண்ணியும் அதைக் கொன்றேன், அதற்காகவும் சிறிது வருத்தப் பட்டிருக்கிறேன்). என்னைச் சுற்றி உள்ளோருக்கு நல்லவைகளை என்னால் முடிந்தவரை செய்கிறேன். ஒரு அன்பு இல்லத்துக்கு மாதா மாதம் எனது நண்பர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து என்னால் முடிந்தவரை அவர்களுக்குக் கொடுக்கிறேன். எதிர்காலத்தில் ஒரு அன்பு இல்லம் நடத்தவும் திட்டம் இருக்கிறது. எனது அப்பா அம்மா பேச்சை இதுவரை தட்டியதில்லை (எனது திருமணத்தை இரண்டு வருடம் தள்ளிப் போடும்படி சொன்னதைத் தவிர)
என்ன ஒன்று வட்டி கிடைத்து விடுமோ என்று பயந்து பெரிய அலுவலகத்தில் சேராமல் இருப்பதில்லை (இது தவறாக எனக்கு சுத்தமாகப் படவில்லை). எனக்குத் தெரிந்த பக்கத்து வீட்டுக் குழந்தைகளை அழைத்துச் சென்று போய் தடுப்பூசி போட்டு விடுவேன்.
எதைப் பார்த்தும் எனக்கு பயம் இல்லை, யாருக்கும் நான் அடிமையும் இல்லை.
என் அறிவுக்கு மட்டுமே கட்டுப் படுபவன் நான். என் போன்று எனது நண்பர்களில் பலரும் இருக்கிறார்கள். எங்களுக்கு எந்த விதத்திலும் கடவுள் தேவைப் பட்டதும் இல்லை.
எப்பொழுதுமே, இல்லை என்பதிலிருந்து இருக்கிறது என்பதை நோக்கி பயனப்படுபவன் நான். என் அனுபவத்தில் கடவுள் இல்லை, நான் வேறு யார் அனுபவத்தையும் அதில் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை (ஏனென்றால் இதில் யார் கூறுவது உண்மை என்பது தெரியாது). ஒரு வேளை உங்கள் கூற்று போல் இறைவன் ஒருவர் இருந்து அவரை நான் உணர நேர்ந்தால் அப்பொழுதும், இது வரை இப்பட்டி இருந்துவிட்டோமே என்று வருத்தப்படவோ, வெட்கப் படவோ மாட்டேன்.
square(a+b) = square(a) + square(b) + 2ab இதைத் தெரிந்து கொள்ள எனக்கு சுமார் 11 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதுபோல் இதற்கும் இத்தனை வருடங்கள் தேவைப் பட்டிருக்கிறது என்று எண்ணிக் கொள்ளுவேன். ஒருவேளை இறைவன் என்பவரே இல்லை என்றால், இது வரை நான் நடந்து கொண்டதையெண்ணி சந்தோசப் பட்டுக் கொள்ளுவேன்.
ஆனால் பரம்பரை பரம்பரையாக இறைவனை தொழுவதால் அவர்களது குழந்தையும் அதே இறைவனை வழிபடுகிறது. இது கண் மூடித் தனமாகக் கருதுகிறேன். ஒரு வேளை கடவுள் இல்லையென்றால் அந்தப் பரம்பரைக்கே அது அவமானம், இத்தனை நாள் இல்லாத ஒன்றை நம்பியதற்கு. :-)
என்னைப் பொருத்தவரையில் கடவுள் இல்லை, இல்லை, இல்லை. உங்களைப் போல் என்னால் தடுப்பூசி கூட போடாமல் இருக்க முடியாது.
வெள்ளம் வரும்போது ஒருவன் ஒரு கூரையின் மேல் அமர்ந்து இருந்தானாம். அந்த வழியே வந்த ஒரு படகுக் காரர், இதில் ஏறிக் கொள்ளுங்கள் உங்களைக் கரை சேர்க்கிறேன் என்றானாம், இறைவன் என்னைக் காப்பாற்றுவார் என்று கூறினானாம். அந்த வழியே வந்த ஒரு கட்டைத் துண்டையும் பற்றாது இறைவன் என்னைக் காப்பாற்றுவார் என்றானாம். இறுதியில் இறந்து இறைவனைக் கண்டு என்னை ஏன் காப்பாற்றாமல் விட்டாய் என்றானாம், அவர் அதற்குச் சொன்னாராம் நான் உனக்காக ஒரு படகு அனுப்பினேன், ஒரு கட்டைத் துண்டு அனுப்பினேன், நீ எதையுமே பயன்படுத்தாது இப்பொழுது என்னைப் பழிக்கிறாயே என்றானாம்.
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி கூட போடாமல் இருப்பது எனக்கு இந்தக் கதையைத்தான் நியாபகப் படுத்துகிறது.
இறைவனை நம்பினால் எதுவுமே வேண்டாம் என்றால் எதற்கு வேலை பார்க்கிறீர்? பசிக்கும், உணவு வேண்டும் என்பதால்தானே!
ஆறாவது அறிவை உங்கள் கடவுள் பிறகு எதற்காகத்தான் கொடுத்திருக்கிறார், இதற்கு பதிலாக ஒரு நட்சத்திர மீனாக இருந்திருக்கலாமே!
இறைவந்தான் மனிதனைப் படைத்தான், இறைவந்தான் எல்லாவற்றையும் கட்டுப் படுத்துகிறான் என்றால், ஏனைய்யா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கவிட்டான் மனிதனை????!!!
எதற்கு விஞ்ஞானம், எதற்கு மருத்துவம்? - சாமி கும்பிட்டா போதாதா???
பாஸ்கர் (Baskar) அங்கப்பன்
உங்களை பற்றியும் உங்கள் சன்மார்க்க வாழ்க்கை பற்றியும் இறைவனுக்கு முழுவதும் தெரியும். அதனால் தான் இறைவன் என்னை அறிமுகப்படுத்தி உள்ளார்.
நீங்கள் உங்களுக்கே ஒரு நல்ல கதை சொல்லியுள்ளீர்கள்.
ஒருவர் இறைவன் இல்லை என்று சொல்லிக்கொண்டு மிகவும் நல்லவனாக வாழ்ந்து வந்தார். அவர் நரகத்தின் வாசலில் நிற்பதை அறிந்த இறைவன் அவர்மேல் மிகவும் அனுதாபத்தோடு பல மனிதர்களை இறைவனை பற்றி சொல்லும்படி அனுப்பி வைத்தார் ஆனால் அவர் தனது கொள்கையில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்
கடைசியான நிலையில், இறைவனை நன்றாக உணர்ந்த, நரகத்தை நேரில் பார்த்த ஒரு மனிதனை அவருக்கு அறிமுகமாக்கினார் ஆனாலும் தன் பிடிவாதத்தால் அவர் எதையும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.
இதற்குமேல் அவருக்காக அழுவதை தவிர வேறு விழி இல்லை!
எதற்குமே ஒரு காலம் உண்டு நீங்கள் இறைவனை உணரும் நாட்களில் காலம் கடந்து விட்டால் அதன் பிறகு அழுது புரண்டும் எந்த பயனும் இல்லை
நான் உண்மையில் உங்களுக்க்காகும் உங்கள் அறியாமைக்க்காகவும் மிகவும் வருந்துகிறேன்!
உங்களுக்காக இறைவனிடம் விண்ணப்பிக்கிறேன்! வேறு என்ன செய்ய?
ஆறாவது அறிவு இறைவனை அறிவதர்க்காக தான் கொடுக்கப்பட்டது. மருந்து மாத்திரை கண்டுபிடித்து சாப்பிட அல்ல மிருகம் போல பிறந்தோம் வாழ்ந்தோம் இனப்பெருக்கம் செய்தோம் செத்தோம் என்று ஒழிந்தது போக அல்ல.
உங்கள் காலமும் உங்கள் சுவாசமும் உங்கள் கையில் இல்லமால் யாருடைய கையிலேயோ இருக்கிறது என்று கண்கூடாக தெரிந்தும், உலகில் பிறப்பவன் எல்லாம் மரித்து எங்கு போகிறான் என்று தெரியாத ஒரு இடத்துக்கு போகிறான் என்பது கண்முன்னால் தெரியும் உண்மையாக இருந்தும் அது என்ன என்று பகுத்தறிய மனதில்லாமல் தன் சுவாசத்தை உங்கள் கையில் வைத்திருப்பவரை இல்லை என்று சொல்பவர், பகுத்தறிவை பற்றி பேசுவது ஆச்சர்யம் தான்.
(அன்பால் திருந்தாத சில நல்லவர்களை இறைவன் அடித்து திருத்துவார்! எதற்கும் தயாராக இருங்கள்)
பாஸ்கர் அவர்களே
உங்களை கடவுளை நம்பவைத்தால் எனக்கு எதோ ஆயிரம் பொன்காசுகள் பரிசு கிடைப்பது போல் இத்தனை 2 மார்க் கேள்விகளை கேட்டுள்ளீர்களே நியாயமா?
ஆயினும் எனக்கு தெரிந்தவரை பதில் தருகிறேன்
wrote: > உங்களிடம் மேலும் சில கேள்விகள், பதில் சொல்லுவீர்கள் என நம்புகிறேன்.">mailme.bas...@gmail.com> wrote: > உங்களிடம் மேலும் சில கேள்விகள், பதில் சொல்லுவீர்கள் என நம்புகிறேன்.
> 2. கடவுளோட பொறுமையின் அளவு என்ன?
> 3. அவரால் செய்ய முடியாதது ஏதேனும் உண்டா?
> 4. அப்படி (3) இருப்பின் அவரால் செய்ய முடியாத ஒன்றாக ஒரு விசயத்தை அவரால் > படைக்க முடியுமா?
> 5. எதற்காக அவர் படைத்த மனிதனை அவரை நம்பாதவராகவும் படைக்கிறார், > விளையாட்டுக்காவா?
> 6. எதற்காகத்தான் மனிதனை படைத்தார்? ஆறாம் அறிவு அவரை அறியத்தான் என்று >
> 7. கடவுள் என்பவர் எந்த மதத்தைச் சார்ந்தவர்?
> 8. என்னை அடித்துத் திருத்துவார்னு சொன்னீங்களே அது இந்துக் கடவுளா (அப்படின்னா > அதுல யாரு?), இல்லை கர்த்தரா, இல்லை அல்லாவா, புத்தரா, மகாவீரரா, ஹிட்லரா, > முசோலினியா, சுந்தரா?
> 9. ஒரு வேளை வேறு மதக் கடவுள் வந்து என்னை அடிக்க வந்து, எங்க அப்பா அம்மா > கும்பிடுற கடவுள் எனக்காக வந்து என்னைக் காப்பாற்ற முயல, கடவுளுக்குள் போர் > வருமா?
> 10. என்னை நரகத்தில் தள்ளுவதால் அவருக்கு என்ன பயன்?
> 11. நான் கடவுள் இருக்கிறான் என்று கூறுவதால் அவருக்கு என்ன பயன்? அவருக்கு என்ன பயனும் இல்லை, நீங்களும் நரகம் போகாமல் தப்பிக்க முடியும் உங்களை போல பலரை தப்புவிக்க முடியும். யாரும் நரகம் போககூடாது என்பது தான் இறைவனின் விருப்பம்
> 12. ஒரு வேளை எல்லாக் கடவுளுமே ஒன்றுதான் என்றால், ஏன் எந்த மதத்திலும், > இன்னும் இத்தனை மதங்கள் இருக்கிறது, அவர்களும் என்னுடைய இன்னொரு பிரதியையே > வணங்குகிறார்கள் என்று கூறவில்லை?
> 13. இல்லை கடவுள் என்பவர் கர்த்தர் மட்டுமேயானால் மற்ற மதத்தினர் அடிமுட்டாளா? > அவர்கல் தெய்வங்கள் வெறும் கட்டுக் கதைதானா?
> 14. சாத்தான் என்பதை கடவுள் ஏன் உறுவாக்கினார்?
> 15. ஏன் ஆப்பிளை சாப்பிடக்கூடாது எனக் கூறி ஆப்பிளையும் அங்கு வைத்தார்?
SUNDAR
No comments:
Post a Comment