Wednesday, May 14, 2008

பொறாமை என்னும் புற்று நோய்!

அன்பர்களே!


இன்று உலகில் எதற்குத்தான் பொறாமைபட வேண்டும் என்ற வரை முறையே இல்லாமல் போய்விட்டது. தனது பக்கத்து வீட்டுக்காரன் தன்னை விட சற்று உயர்ந்து விட்டால் பிடிப்பதில்லை. பத்து வீடு கட்டி வாடகைக்கு விட்டிருப்பவர் தனது வீட்டில் வாடகைக்கு இருக்கும் ஒருவர் ஒரு பிரிட்ஜ் வாங்கி விட்டால் தாங்க முடியாமல் தவிக்கிறார்.


அடுத்தவர் பொருளை பார்த்து, வேலையே பார்த்து, கணவன், மனைவியை பார்த்து, படிப்பை பார்த்து, வீட்டை பார்த்து, அழகை பார்த்து என்று எந்த ஒரு காரணத்தை வைத்தாவது பொறாமைபடுவது என்பது இந்த கால கட்டங்களில் மிகவும் அதிகமாகிவிட்டது.


இன்றைய உலகில் தன் சொந்த அக்கா தங்கை அண்ணன் தம்பி போன்றோர் நலமாக வாழ்வதை பார்த்து பொறுக்க முடியாமல் செய்வினை, மந்திரம் பண்ணும் அவல நிலையை கிராமங்களில் பார்க்கலாம்.


உலகத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் அப்படி என்றால் கிறிஸ்த்தவ சகோதர், சபையில் கூட தேவமனிதர்கள் இடையே கூட போட்டி பொறாமை நிலவுகிறது. ஒரு பாஸ்டர் நல்ல செய்தி கொடுத்தால் இன்னொருவருக்கு தாங்க முடிய வில்லை. ஒரு பாஸ்டர் ஜெபம் வீட்டில் வந்து ஜெபம் பண்ணும் போது இன்னொருவர் தற்செயலாக வந்துவிட்டால் அவர்கள் இருவரும் ஏதோ எதிரிகள் போல பார்த்துகொள்கின்றனர்.


பொறாமை வர முதல் காரணம், தனக்கு இருப்பதுடன் மன நிறைவு அடையாததும், தன்னை போல மற்றவர்களும் சுகமாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம் இல்லாததும் தான் காரணம்.


நன்றாக யோசித்து பார்த்தால் நாம் பொறாமை படுவதில் எந்த பயனும் கிடையாது. ஒருவர் நன்றாக வசதியாக இருந்தால் தான் நாளை நாம் ஒரு அவசர தேவைக்கு ஒரு உதவிக்கு அவரிடம் போகும் போது அவரால் உதவ முடியும் அல்லது ஒரு நேர உணவாவது கொடுக்க முடியும். அவர் கஷ்டப்பட்டால் நமக்கு எந்த பயனும் கிடையாது.


நாம் கொண்டுள்ள பொறாமை ஒரு புற்று நோயை போல பிறரை விட மோசமாக நம்மை அதிகம் தாக்கும் தன்மை உடையது.


தாவீதின்மேல் பொறாமை கொண்ட சவுல் சாகும்வரை அந்த ஆவியில் இருந்து விடுபட முடியவில்லை. எல்லா வேலையையும் விட்டு விட்டு தாவீதை கொல்வதிலேயே தீவிரமாக அலைந்தான்.


எனவே தான் பைபிள்
"பொறாமை புத்தி இல்லாதவனை அதன் பண்ணும்"
"பொறாமை தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும்!
என்று எச்சரிக்கிறது


ஆகையால் நாம் நலம் வாழ எல்லா காவலோடும் நம் இருதயத்தை காத்துக்கொண்டு எதற்கும் உபயோகம் இல்லாத பொறாமையை விட்டுவிடுவோமாக.
அடுத்தவர் மகிழ்ச்சியில் நாம் இன்பம் கண்போமாக!

அனேக நேரங்களில் பொறாமை நம் அனுமதி இல்லாமலே நம்முள் வருகிறது அப்படி வரும்போது இறைவனே இவரை என்னைவிட 100 மடங்கு அதிகமாக அவரை அசீர்வதியும் என்று வாய் திறந்து சொல்லுங்கள் அது ஓடியே பொய் விடும்.







No comments: