ராஜாவின் விருந்து ஒன்றுக்காக ஒரு கூடை நிறைய பழங்கள் வாங்கி ராஜாவின் அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டது.
.
பழகூடையை திறந்து ராஜா பார்வையிட்டபோது பல பழங்கள் அழுகி இருப்பதை அறிந்து, தனது வேலைக்காரரை அழைத்து நல்ல பழங்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துவிட்டு, அழுகிய பழங்களை எடுத்து அது அரண்மனையை கெடுத்து விடாதபடிக்கு ஆழ குழி தோண்டி புதைக்க கட்டளை இட்டார்.
.
அதை அறிந்த அழுகல்பழம் வாங்கும் ஒருவர் ராஜாவிடம் கிரயம் கொடுத்து அழுகல் பழங்கள் எல்லாம் தனக்கு தரவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டார். ராஜாவும் அதற்கு சம்மதித்தார்.
.
வேலைக்காரன் பழத்தை பிரிக்கும் போது அனேக பழங்கள் அழுகல்பழம் வாங்குபவரிடம் போக விரும்பாமல், எப்படியாவது ராஜாவின் வீட்டு விருந்துக்கு போக ஆசைபட்டு தன் சின்ன சின்ன அழுகல்களை எல்லாம் உள்ளே மறைத்து கொண்டன. பல சொத்தை பழங்கள் தனது சொத்தை தன்மையை மறைத்துக்கொண்டு நல்ல பழம்போல காட்சி கொடுத்தன இன்னும் சில பழங்கள் உள்ளே முழுவதும் அழுகி இருந்தும் தோலை மட்டும் நல்லதுபோல் காட்டி தப்பித்துக் கொண்டன.
.
அழுகல் பழங்களை வாங்கியவர் அவைகளை எல்லாம் நன்றாக கழுவி சுத்திகரித்து அனேகருக்கு பயன் உள்ள பழரசமாக மாற்றினார். ஆனாலும் அவர் வாங்கியதில் பல அழுகல் பழங்கள் தன்னை சுத்திகரிக்க அவர் கையில் ஒப்புகொடுக்க வில்லை. எனவே அவைகள் ஆழ குழி தோண்டி புதைக்கப்பட்டன.
.
நல்ல பழங்களை பார்வையிட்ட ராஜா அத்துடன் இன்னும் பல சொத்தை பழங்கள் கலந்திருப்பதை உடனே கண்டுகொண்டார். அவற்றை எல்லாம் அப்புறப்படுத்த ஆரம்பித்தார் சின்ன சின்ன சொத்தையில் இருந்து லேசாக அழுகிய பழம் எல்லாமே பிரிக்கப்பட்டு (அழுகல் பழ வியாபாரி போய் விட்டாதால்) ஆழகுழி தோண்டி புதைக்கப்பட்டது.
.
இங்கு ராஜா இறைவனாகவும் அழுகல் பழம் வாங்குபவர் "நீதிமானை அல்ல பாவிகளையே இரட்சிக்க பூமிக்கு வந்தேன் என்று சொன்ன இயேசுவாகவும் ஆழ குழி என்பது நரகமாகவும், பயன்பட்டவர்கள் எல்லாம் சொர்க்கம் சென்றவர்களாகவும் எடுத்துக்கொள்க!
.
நீங்கள் பொய், திருட்டு, வஞ்சம், பொறாமை, பெருமை, பண ஆசை, லஞ்சம், ஏமாற்று போன்ற எந்த கெட்ட குணமும் சிறிது கூட இல்லாத பரிசுத்தவானாக இருந்தால் மட்டும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள் ஒரு துளி விஷம் கூட ஒரு டம்ளர் பாலை குடிக்க தகுதி அற்றதாக மாற்றிவிடும்
இறைவன் மிக மிக பரிசுத்தர். பரிசுத்தம் இல்லாத எவனும் அவரை நெருங்கவே முடியாது.
.
இல்லை அது முடியவில்லை என்றால் பாவிகளை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்துவிடம் இன்றே ஓடி வாருங்கள் அவர் உங்களை சுத்தப்படுத்தி தகுதிப்படுத்துவார்.
.
இரண்டும் இல்லாமல் சிறு சிறு குற்றம் தான் என்னிடம் உள்ளது அதை மன்னித்து இறைவன் என்னை ஏற்றுக்கொள்வார், எங்களுக்கென ஒரு தனி வழி வைத்திருப்பார் என்றெல்லாம் நினைத்து இரண்டும் இல்லாத நிலையில் வாழ்வீர்கள் என்றால் அதன் முடிவு துக்கமே!
சில கேள்விகள்,
வேண்டுமேன்றே அந்தப்பழங்கள் அழுகினவா? அல்லது பக்குவப்படுத்த ஆள் > இல்லாமையினாலா? > 2. தோட்டக்காரன் அழுகல்பழங்களை தன் சுயநலத்திற்காக நல்லபழங்களுடன் கலந்து > விட்டானா?
பழங்கள் மரத்தில் பழுக்கும் போது நன்றாகத்தான் இருந்தன தோட்டக்காரன் கூடையில் அடுக்கும் போதும் நன்றாகத்தான் இருந்தன ஆனால் அவை இருந்த சூழ்நிலை காரணமாக மற்றும் தீமை என்னும் கிருமிகள் காரணமாக அழுகல் மற்றும் சொத்தையாக போய்விட்டன
> 4.மண்ணில் புதையுண்ட அந்தப்பழங்களின் விதைகள் நல்லபழங்களைத் தராதா? மண்ணிக்கு > உரம் ஏற்றாதா?
மண்ணில் புதையுண்ட விதைகள் மீண்டும் மரமாகி அதேபோல் கெட்ட கனிகளை தந்துவிடக்கூடாது என்று தான் ஆழகுழி தோண்டி புதைக்கப்பட்டன என்று எழுதினேன்
> 5.பழவியாபரியை படைத்ததுபோல் அழுகல் நோய்தீர்க்கும் மருந்தை பூமியில் மாரியாய் > கொட்டிருந்தால் பத்தாதா? (இன்றைய தேதிக்கு நமக்கு இறைத்தூதர்களைவிட > மனிதநேயத்தைப் பரப்பும் மகான்கள் தானே அவசியம்)
அழுகல் நோய் தீர்க்கும் மருந்து பூமியில் இலவசமாக கொட்டி கிடக்கிறது அன்பரே (இயேசுவின் இரத்தமாக) அதை எடுத்து உண்டால் தானே அழுகல் நோய் போகும். நாம் என்ன ஒரு மிருகமா பிடித்து மருந்தை வாயில் வூட்டி விட!
முக்கியமாக தீமையை படைத்தது இறைவன் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் அட்டுபவர் அல்ல. நாளை நீங்கள் இறைவன் முன் நின்று கேட்கும் எந்த கேள்விக்கும் நியாயமான பதில் அவரிடம் உண்டு. SUNDAR
No comments:
Post a Comment